ப.சிதம்பரம் வெற்றி செல்லும் : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

2009- Lok Sabha Election : 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2009- Lok Sabha Election P.chidambaram : 2009-மல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர்  ராஜ கண்ணப்பனை 3354 வாக்குகள் வித்தியாசத்தில், வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் ப.சிதம்பரத்தின் இந்த வெற்றியில் முறைகேடு இருப்பதாகவும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி, அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் கடந்த 2009-ம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி செல்லும் என்றும், இந்த தேர்தலில முறைகேடு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  முன்னதாக இந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அப்போது தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil election news p chidambaram won approved high court

Next Story
மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை… இனி சென்னையில் இருந்து உங்க ஊருக்கு செல்வது ரொம்ப ஈசி!chennai to southern trains chennai central
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com