25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம்

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று தலைமைச்செயலக முற்றுகையையும் நடத்தவிருக்கின்றனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று தலைமைச்செயலக முற்றுகையையும் நடத்தவிருக்கின்றனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

author-image
WebDesk
New Update
Farmers Protest

சென்னையில் விவசாயிகள் போராட்டம்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சென்னை பெசண்ட் நகரில் தொடர் சத்யாகிரக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று தலைமைச்செயலக முற்றுகையையும் நடத்தவிருக்கின்றனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

Advertisment

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தமிழகத்துக்கென தனி வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைதொடங்க வேண்டும், காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னை பெசன்ட் நகரில் காலவரையற்ற சத்யாகிரக போராட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கியது.

கடந்த 3 நாட்களாக நடந்து வரும் இந்த சத்யாகிரக போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், மாலை பெசண்ட் நகரில் இருந்து ஊர்வலமாக சென்று சென்னை தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருக்கின்றார். இது குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,

publive-image
Advertisment
Advertisements

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தைவிட பல மடங்கு கொடுமையான சட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டமாகும். இதனால் விவசாயிகளின் சுதந்திரம் பறிபோகும். எனவே, அதைதிரும்பப் பெற வேண்டும். திமுக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து, விவசாயிகளை அழிக்க நினைப்பதை ஏற்க மாட்டோம். போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என கூறியுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் மே-7 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், முல்லை பெரியாறு பாசனக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திருபுவன ஆதிமூலம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுப் பொதுச் செயலாளர் விகேவி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர், சென்னை மண்டலத் தலைவர் சைதை சிவா, உயர்நிலைக் உறுப்பினர் ராமதாஸ், சென்னை மீனவர் சங்க தலைவர்கள் மகேஷ், மாறன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சத்யாகிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: