ரூ.5 மற்றும் ரூ.10 நிவாரண காசோலையை பெற்ற விவசாயிகள்... மத்திய கூட்டுறவு வங்கியின் அலட்சியம்!

அதிமுக அரசு பெருமையடித்துக்கொண்டது வேடிக்கையாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் போடார்வர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து நிவாரண தொகையாக ரூ 5-ல் இருந்து ரூமாய் 10 வரை காசோலை அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு அறுவடையில் நஷ்டம் விளைந்ததைத் தொடர்ந்து நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வித்திருந்தனர். இதையடுத்து, திண்டுக்கல் கிளையின் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் காப்பீட்டு நிவாரண தொகையாக ரூபாய் 5, 7 மற்றும் ரூபாய் 10 வரை காசோலை அனுப்பப்பட்டது.

இந்தச் சம்பவத்தை நேற்று நிகழ்ந்த சட்டசபை கூட்டத்தில் முன்னல் அமைச்சர் பிச்சாண்டி சுட்டிக்காட்டினார். இதற்கு, பிழைகள் நடந்துள்ளதாகவும் இதைச் சரி செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மேலும் “திண்டுக்கல் மற்றும் நாகை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நிகழ்ந்துள்ள இந்தத் தவறு குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.” எனவும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான விவாதத்தில், “ஒரு ஏக்கர் விவசாய நஷ்டத்தில் ரூபாய் 5 மற்றும் ரூபாய் 10 மட்டுமே அளிப்பது முறையா? கடந்த ஆண்டு ரூ. 3,113 கோடியைக் காப்பீடுகளுக்கு ஒதிக்குள்ளதாக அதிமுக அரசு பெருமையடித்துக்கொண்டது வேடிக்கையாக உள்ளது.” என்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, “திண்டுக்கல்லில் மூன்று கிராமங்களில் மட்டுமே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. நாகை மாவட்டத்தில் ஒரு சிலருக்கே இது போல் நடந்துள்ளது. இதை விரைவில் சரி செய்யுமாறு உத்தரவும் போடப்பட்டுள்ளது” என்றது.

அறுவடை காலத்தில் நஷ்டம் ஏற்பட்டால், ரூபாய் 26 ஆயிரம் வரை காப்பீடு தொகை பெறும் தகுதி விவசாயிகளுக்கு உண்டு. இதில், பருப்பு விளைவுக்கு ரூபாய் 12 ஆயிரம் மற்றும் சிறுதானியங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை காப்பீடு தொகை வழங்கப்படலாம். ஆனால் திண்டுக்கல் விவசாயிகள், ரூ 5 மற்றும் ரூ 10 மட்டுமே காசோலையாக பெற்றுள்ளது அவர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close