பெண்கள் மீது அதிகரிக்கும் குற்றங்களுக்கு அவர்கள் அணியும் உடையே காரணம், பெண்கள், புடவை, பாவாடை அணிய வேண்டும். ஒழுங்காக இருக்க வேண்டும். எல்லா தவறுக்கும் ஆண்கள் ஆண்கள் என சொல்வதா என்று சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புச்செல்வன் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை தடுக்க, அரசு சட்டத்தில் பல மாற்றங்களையும் செய்து வருகிறது. ஆனாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் சமீப காலமாக தமிழகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாலியல் குற்றங்கள் நடக்கும் நிலையில், காவலர்களுக்கும் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் கடுமையாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பெண்கள் மீது அதிகரித்து வரும் குற்றங்களுக்கு அவர்கள் அணியும் உடைதான் காரணம் என்று சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புச்செல்வன் கூறியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள அவர், எல்லா தவறுக்கும் ஆண்கள், ஆண்கள் என்று சொல்வதா? பெண்கள் பாவாடை, புடவை அணிய வேண்டும். ஒழுங்கமாக இருக்க வேண்டும். அறைகுறை ஆடை அணியும் பெண்கள் மீது தான் தவறு.
எந்த நாட்டில் தவறு நடக்கவில்லை. எல்லா இடங்களிலும் தவறு நடக்கத்தான் செய்கிறது. பெண்கள் தங்கள் உடையில் சரியாக இருந்தால், தவறு நடக்க வாய்ப்புகள் குறையும் என்று அன்புச்செல்வன் கூறியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்து வருகிறது,