Delhi | Crime | போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டு முயற்சியின் விளைவாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 50 கிலோ போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் பொருள்கள் உணவுப் பொருள்களுடன் கலந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலின் மூளையாக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் அவர் தலைமறைவானார். என்சிபியின் துணை இயக்குநர் ஜெனரல் (டிடிஜி) ஞானேஷ்வர் சிங், “கைது செய்யப்பட்ட நபர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 45 சூடோபீட்ரைன் ஏற்றுமதிகளை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.
இந்த ஏற்றுமதிகள் தோராயமாக 3,500 கிலோ சூடோஎபெட்ரின், சர்வதேச சந்தையில் ரூ.2,000 கோடி மதிப்புடையது ஆகும்.
பிப்ரவரி 15 அன்று ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், என்சிபி மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கு டெல்லியின் பாசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, அந்த வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, மங்கை திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், இறைவன் மிகப் பெரியவன் படத்தின் நாயகன் மைதீன் மற்றும் சலீம் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“