அடடே… அப்படியா? மூத்த தலைவருக்கு கிடைத்த மரியாதை

விழாவுக்கு கணவன், மனைவி இருவரும் அழைப்பிதழை கொடுக்க செல்வார்கள் என மூத்த தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். 32வது நபர் மூலம் கொடுத்துள்ளனர்.

Durga Stalin n

தமிழகத்தின் மூத்த தலைவர் அவர். தற்போது ஆக்டிவாக இல்லை என்றாலும், அரசியலில் அவருக்கான முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை.

சமீபத்தில் அவர் குடும்பத்தின் மிக முக்கியமான புத்தக வெளியீட்டுவிழா நடந்தது. கணவரைப் பற்றி மனைவி எழுதி ஒரு பத்திரிகையில் தொடராக வந்த புத்தகத்தை குடும்பம் சகிதமாக வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

அந்த குடும்பத்தில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் தலைவருக்குத்தான் முதல் பத்திரிகை போகும். இதுதான் அந்த குடும்பத்தில் காலகாலமாக நடப்பது.

இந்த விழாவுக்கு கணவன், மனைவி இருவரும் அழைப்பிதழை கொடுக்க செல்வார்கள் என மூத்த தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏனோ… மூன்றாவது நபர் ஒருவர் மூலமாக தலைவருக்கு பத்திரிகை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். தலைவரால் பேச முடியவில்லை என்பதால், ஏதும் சொல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டாராம்.

இதுதான் தலைவருக்கு கொடுக்கக்கூடிய மரியாதையா? என கட்சியின் மூத்த தலைகள் முனுமுனுக்கிறார்கள்.

கொசுறு செய்தி… கட்சியின் ஒவ்வொரு மாவட்டமும் ஆயிரம் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற உத்தரவும் போயிருக்கிறதாம்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil gossips respect for senior leader

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com