அடடே... அப்படியா? நடிகரை ஆதரிக்கும் தம்பியின் பாச ரகசியம்!

அந்த நடிகருக்கு என்ன யோசனை சொன்னீர்கள்? நான் உங்கள் மாணவன். எனக்கும் சொல்லுங்கள். நான் அந்த நடிகரை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என கேட்டுள்ளார்.

தசவதாரம் எடுத்த நடிகருக்கு அரசியல் குருவாக இருப்பவர் தாமிரபரணி பாயும் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஒருவராம். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவரிடம் சுமார் மூன்று மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார், நடிகர்.

அந்த எழுத்தாளரின் குடும்ப நண்பரான மதுரை பேராசிரியர் உயர் மட்ட குழுவில் இடம் பிடித்ததும் அவர் சொன்னதால்தானாம்.

விஷயம் அதுவல்ல. கட்சியின் பெயரை இரவல் வாங்கி வைத்திருக்கும் அந்த பண்ணையார் தம்பியும், எழுத்தாளரின் மாணவன் தானாம். கமல் வந்து சந்தித்துவிட்டு போன விபரம் தெரிந்தது, தம்பியும் எழுத்தாளர் வீட்டுக்கே போய்விட்டாராம்.

அந்த நடிகருக்கு என்ன யோசனை சொன்னீர்கள்? நான் உங்கள் மாணவன். எனக்கும் சொல்லுங்கள். நான் அந்த நடிகரை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று கேட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொல்லை செய்தாராம். ஆனால் கடைசி வரையில் எழுத்தாளர் பதில் சொல்லவே இல்லையாம்.

தன்னுடைய ஆசானை குருவாக கொண்டவரை எதிர்க்க கூடாது என்றுதான், பண்ணக்கார தம்பி, நடிகரை அவர் வீட்டிலேயே சென்று சந்தித்தாராம். கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்ன இன்னொரு நடிகரை எதிர்க்கும் பணக்கார தம்பியால், மய்யத்தை எதிர்க்க முடியவில்லையாம்.

×Close
×Close