Advertisment

சூர்யாவை உதைப்போம் என்கிறார்களே... தல, தளபதி என்ன செய்கிறார்கள்? மார்க்சிஸ்ட் கேள்வி

Tamil Jaibhim Issue : தனது சகநடிகரை உதைப்பாபோம் என்கிறார்களே அதுபற்றி இவரின் கருத்து? என்று சிபிம் அருணன் நடிகர் சந்தானத்திடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
சூர்யாவை உதைப்போம் என்கிறார்களே... தல, தளபதி என்ன செய்கிறார்கள்? மார்க்சிஸ்ட் கேள்வி

Tamil Movie Jai Bhim Issue : சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சபாபதி படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் ஜெய்பீம் படம் குறித்து பேசியது பெரும் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடந்த 2-ந் தேதி வெளியான படம் ஜெய்பீம். இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்து காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும் ஊடகங்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும், கருத்தக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் தனியார் திரையரங்கில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய நடிகர் சந்தானம், எந்த படத்திலும் யாரையும் குறைவாக பேச கூடாது. ஒருமுறை உயர்த்தி பேசலாம். ஆனால் தாழ்த்த கூடாது. இந்துக்களை உயர்த்தி பேசும் வகையில் படம் எடுக்கலாம். அதற்காக கிறிஸ்துவர்களை தாழ்த்தி பேச கூடாது. அப்படி பேசுவது தேவையில்லாத ஒன்று.

தியேட்டரில் எல்லா மதத்தினரும் படம் பார்க்க வருவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனி இளைஞர்கள் சமுதாயத்திற்கு நாம் நல்ல சினிமாவை தர வேண்டும், படத்திற்காக யாரையும் தாழ்த்தி பேசுவது சரியாக இருக்காது, என்று சந்தானம் கூறியுள்ளார்.  

சந்தானத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. மேலும் சக நடிகர் ஒருவருக்கு பிரச்சனை என்றால் சந்தானம் ஆதரவு அளிக்கமாட்டார் என்றும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் சந்தானத்தின் கருத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சமூக வலைதளங்கள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், நடிகர் சந்தானத்தின் கருத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  "நம்மை உயர்த்திபேசுவதற்காக அடுத்தவர்களை தாழ்த்தி பேசக்கூடாது":நடிகர் சந்தானம். ஜெய்பீம் படத்தில் யாரையும் உயர்த்தவும் இல்லை,தாழ்த்தவும் இல்லை. போலிசில் புகுந்திருக்கும் அதிகாரத்திமிரையே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

தனது சகநடிகரை உதைப்பாபோம் என்கிறார்களே அதுபற்றி இவரின் கருத்து? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு முந்தைய ட்வீட்டில் நடிகரும் தயாரிப்பாளருமான சூரியாவை அடித்தால் ரூ ஒருலட்சம் என்று ஒரு கோஷ்டி அறிவிக்கிறது, ஓடிய அவரது படத்தை தடுத்துநிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன? என்று கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார்கள் உலகநாயகன்கள் தலைகள் தளபதிகள் எங்கே? இன்று சூரியாவுக்கு நாளை இவர்களுக்கு!, என்றும் அருணன் விமர்சனம் செய்து இருந்தார். திரையுலகின் மற்ற மூத்த நட்சத்திரங்கள் சூர்யாவிற்கு உதவி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே போல் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சூர்யாவில் வேல் திரைப்படத்தை மயிலாடுதுறையில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர்.

அப்போதே மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தது கடும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தற்போது அருணன் சந்தானத்திற்கு விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment