காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தது.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழ் பாராம்பரிய உயைான வேட்டை சட்டையுடன் வந்திருந்த பிரதமர் மோடி நிக்ழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திண இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ’ணன் இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
காசி பனாரஸ் இந்து பல்கலைகழகம், மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. இளையராஜாவின் இசை கச்சேரியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இளையாஜா தனது இசையால் அனைவரையும் மெய்மறக்க வைத்துள்ளார். இதில் நான் கடவுடள் படத்தில் இடம்பெற்ற ஓம் சிவ ஓம் என்ற பாடலை கேட்டு பிரதமர் மோடி, மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்ததை பார்க்க முடியாதது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, காசிக்கும் தமிழிழுக்கும் பெரும் தொடர்பு உள்ளது. பாரதியார் இரண்டு ஆண்டுகள் காசியில் தங்கி கல்வி பயின்றார். கபீர் தோஹாவில், 8 வார்த்தைகள் மூலம் ஆன்மீகம் பேசினார். தமிழ்நாட்டில் திருவள்ளூவர் 7 வார்த்தைகளில் உலகிற்கு வாழ்வியலை கொடுத்தார். கர்நாடக சங்கீதத்தின் மாமேதை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் இங்கு வந்து பல இடங்களில் பாடி சென்றுள்ளார்.
அவர் கங்கையில் வந்து மூழ்கி எழுந்தபோது சரஸ்வதி தேவி அவர் கையில் வீனையை பரிசு அளித்திருக்கிறார். அந்த வீனை தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு்ளளது.இவ்வளவு சிறப்பை பெற்ற காசியில் தமிழ் சங்கமம் நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை கண்டு வியக்கிறேன். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழ சங்கமம் நிகழச்சியில் 13 மொழிகளில் திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்பிறகு பேசிய அவர், வணக்கம் காசி வணக்கம் தமிழ்நாடு என்று உரையை தமிழில் தொடங்கினார். காசிக்கும் தமிழகத்திற்கும் நீண்ட பங்கு உள்ளது. காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த தமிழ் சங்கமமே சாட்சி. காசிக்கு துளசி தாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளூர் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“