பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வெள்ளி விலை
22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,650 என்றும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.6,164 என்றும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.49,312 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.81 என்று, கிலோவுக்கு ரூ.81,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை அறிக்கை
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சோதனை முயற்சி தோல்வி! தவறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் அடுத்தகட்ட சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என அந்நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்!
நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி கால் அசந்துவிட்டது” – தேர்தல் ஆணைய முடிவு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் பேட்டி
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வாகனத்தின் மீது பயங்கவராதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்து 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் “அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக, அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” 48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் – டி.ஆர்.பாலு
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். ஒரு சிலரை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்ப்போம். ஒற்றை தலைமை என என்னை அழைக்க வேண்டாம், நானும் தொண்டன் தான்” சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
“வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது; தமிழ்நாட்டை தனது தாயகமாகவே மதித்தவர் வி.பி.சிங்; முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து வரலாறு படைத்தவர். அவருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்ட வார்த்தைகளே இல்லை” – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி!
2002 குஜராத் கலவரத்தின் போது நரோதா காம் பகுதியில் 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 68 பேரையும் விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்!
அதிமுகவின் புதிய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவை கொண்டாடும் வகையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி: “அ.தி.மு.க ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்தவர், டி.ஜி.பி, காவல் ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மீதெல்லாம் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு குட்கா தலைவிரித்து ஆடியது என்பது உண்மை.
இப்போது கூட முன்னாள் டி.ஜி.பி, முன்னாள் காவல் ஆணையர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது; போதைப்பொருட்கள் மிகுந்த மாநிலமாக தமிழ்நாட்டை விட்டுச் சென்றது அதிமுக ஆட்சிதான்”
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் உயர்ந்தீமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதம்: “அ.தி.மு.க-வில் தான் நீடிப்பது கட்சியின் நலனுக்கு விரோதமானது என எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்படி கூற முடியும்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதியுள்ள தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தியுள்ளனர்” என்று வாதிடப்பட்டது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாடா துரியன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்திய ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்ததில் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாமென தகவல் வெளியாகி உள்ளது. சந்தேகத்திற்கிடமான குண்டுவெடிப்பால் தீ ஏற்பட்டதாகவும் இதில் குறைந்தது 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் சொல்லப்படுகிறது.
கோடநாடு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே, சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. “பிரச்னையை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியோட கடமைதான்; ஆனால் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டாம், ஆதாரத்தோடு பேசுங்க பதில் சொல்றேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “தவறுகள் நடைபெறுவது இயல்பு. ஆனால், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி, கொடநாடு வழக்கிலும் நாங்கள் தான் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார்.
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் பல் பிடுங்கப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டத்தையடுத்து, விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி பெண் காவல் ஆய்வாளர் உலகராணி, விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் முகாம் அலுவலகமாகவும், வசித்த இடமாக இருந்ததுதான் கோடநாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து பதிலளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, “கோடநாடு வீடு, ஜெயலலிதாவின் வீடு அல்ல, மற்றொருவருடையது” என்று கூறினார்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக பதிலளித்தார். “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீங்க என்ன செஞ்சீங்க? நாங்க வந்துதான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கிறோம் என்று கூறினார்.
25 வயதான பிரபல கொரிய பாடகர் மூன்பின் உயிரிழந்துள்ளார். மூன்பின் அவரது வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொள்கிறார். இதை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் பலோச் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் புகார்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா அளித்த இடைக்கால அறிக்கை அடிப்படையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் இயற்ற வலியுறுத்தி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் தொடர்பாக வீடு வீடாக விழிப்புணர்வு பரப்புரையை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இன்று விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி, அனைத்து வீடுகளுக்கும் சென்று கடிதத்தின் நகலை வழங்கினார்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்து, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறையால் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்தியாவிலே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பதாக தேசிய குற்ற ஆவண பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
அதிமுக அலுவலகத்தில் வன்முறை நடந்தப்போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது என அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.
அப்போது தாக்குதல் நடத்தக்கூடும் என முன்கூட்டியே புகார் அளித்தும் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதற்கு, இது உட்கட்சி விவகாரம், அலுவலகத்திற்கு உள்ளே நடந்ததற்கு காவல்துறை பொறுப்பல்ல. இருப்பினும் வெளியே பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முதல்வர் பதில் கூறினார்.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்
சென்னை மண்ணடியில் பீகாரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மண்ணடி மலையப்பன் தெருவில் உள்ள பை தைக்கும் குடோனில் குழந்தை தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டில் தனிமைப்படுதிக்கொண்டார்
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், ஓபிஎஸ் தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி,
கோலார் தங்கவயல் மற்றும் காந்தி நகர் தொகுதிகளில் போட்டிவிடுவதாகவும், கோலார் தங்கவயல் தொகுதி வேட்பாளராக அனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதி வேட்பாளராக குமார் போட்டியிடுகின்றனர்.
சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்ய கோரிய அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் இ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை நிறுத்திய நிலையில், ஓ.பி.எஸ். தரப்பும் இன்று வேட்பாளரை அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளார்.
“சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவர் வி.பி.சிங். சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அளித்த ஊக்கத்தின் உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூக நீதிப்பார்வையில், சமூக நீதிப்பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
சமூக நீதிக் காலவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும்.” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் பழைய சாலைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு புதிய சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஆவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததார்களுக்கு மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பழைய சாலை அகழ்ந்தெடுக்கப்பட்ட 3 நாட்களில் புதிய சாலை அமைக்க வேண்டும். 5 நாட்களுக்கு பின்னரும் புதிய சாலை பணியை தொடங்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.5000 வீதம், பணி முடியும் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
கட்டட பழுது பார்க்கும் பணியின்போது மாநகராட்சியின் முன் அனுமதி பெறாதது பற்றி விளக்கம் தர உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,286ஆக உயர்ந்துள்ளது.
22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,650 என்றும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.6,164 என்றும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.49,312 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தர்மபுரி பாலக்கோடு அருகே உள்ள கெசர்கிழி காப்புக்காடு வனப்பகுதியில், கர்ப்பிணி யானை உடல்நலம் பாதிப்பால் உயிரிழந்தது. உடற்கூராய்வுக்கு பிறகு யானை புதைக்கப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில், 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் ஆயிரத்து 110 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நீட் நுழைவுத் தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
வரும் மே 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு, ஈ.பி.எஸ்., வேட்பாளராக அறிவித்த புலிகேசி நகர் தொகுதியில், ஓ.பி.எஸ்., சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.