பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
புதுச்சேரியில் சுங்க கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு டோல்கேட் சுங்க கட்டணத்தை உயர்த்தி அறிவித்த நிலையில் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள மொரட்டாண்டி டோல்கேட்டை லாரி உரிமையாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பாண்டிச்சேரி லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜென்ட் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே டீசல் விலை உயர்வால் டிரான்ஸ்போர்ட் தொழில் நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சுங்க கட்டணத்தை உயர்த்தி வருவதால் டிரான்ஸ்போர்ட் தொழில் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் தற்போது உயர்த்திய சுங்க கட்டணத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் கூட்டமைப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“