பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை அமைச்சர் தேனீஜெயக்குமார் சட்டசபையில் வெளியிட்டார்
புதுச்சேரி அரசின் அரசிதழ பதிவு பெறாத குரூப் பி பணியிடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அதிமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கான உரிய இட ஒதுக்கீட்டு அரசாணையை இன்று (15.03.2023) துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்து அந்த அரசாணையை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் வழங்கி அனைத்து உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவையில் வழங்குவதற்கு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தேனி ஜெயக்குமார் கூறுகையில், குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. முதலமைச்சர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றார்.
அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமார் ஆகியோர் இடஒதுக்கீட்டில் சில சந்தேகங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் தேனீஜெயக்குமார், அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை நகல் வழங்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக கேள்விநேரத்தின்போது திமுக எம்எல்ஏ கென்னடி, அரசிதழில் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் முன்பாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீஜெயக்குமார், குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து உட்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/