அரசுப்பணிகளில் தமிழில் படித்தோருக்கே முன்னுரிமை - சட்டசபையில் மசோதா தாக்கல்
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisment
2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டமுன்வடிவு மற்றும் தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் தொடர்பான சட்டமுன் வடிவை மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் அரசுப் பணியிடங்களில் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு 20% வரை முன்னுரிமை அளிக்க மசோதா வழிவகை செய்யும். ஆனால் பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்பிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும், அவர்களுக்குத்தான் 20 சதவீத முன்னுரிமை அளிக்கப்படும். முன்னதாக இளங்கலை அல்லது முதுகலை பட்டத்தை மட்டும் தமிழில் படித்துவிட்டு அரசு வேலையில் முன்னுரிமை கேட்பது அதிகரித்து இருந்தது. இதேபோல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் (தாய்மொழியில்) படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசு விரும்பியது.
இதையடுத்து, தமிழ் வழியில் 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு வரை அனைத்தையும் தமிழ் வழியில் படித்தால் தான் இனி அரசு வேலையில் 20 சதவீத முன்னுரிமை பெற முடியும்.
சட்டசபையில் மசோதா நிறைவேற்றிய பின்னர், கவர்னரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவம் பெறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil