கரூரில் ஐ.டி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பிரமுகர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவர்களின் முன் ஜாமீனையும் ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிக்கு சொந்தமான் இடங்களில் வருமானவரித்துறை அதிகரிகள் கடந்த மே மாதம் 25 ந் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார்.
இதனிடையே வருமாவரித்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொள்ள வந்தபோது சிலர் அதிகாரிகள் மீது கடுமையான தாக்குதலவ் நடத்தினர். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பான அளத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 19 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்திருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் கரூர் குற்றவியல் நீதிமன்றம், ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது. கீழமை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வருமானவரித்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன் ஜாமீனை ரத்து செய்த நிலையில், 3 நாட்களில் அனைவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை கரூர் குற்றவியல் நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“