scorecardresearch

திடீரென முஸ்லிமாக மாறிய ஆசிரியை சபரிமாலா: காரணம் என்ன?

ஒரு முஸ்லிமாக இருப்பது ஒரு பெரிய பாக்கியம் மற்றும் மரியாதை என்கிறார் இவர்.

திடீரென முஸ்லிமாக மாறிய ஆசிரியை சபரிமாலா: காரணம் என்ன?

தமிழ் தன்னம்பிக்கை பேச்சாளரும் ஆசிரியருமான சபரிமாலா ஜெயகாந்தன், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தெரிவித்தார்.

அவருடைய பெயரையும் ஃபாத்திமா சபரிமலா என்று மாற்றிக் கொண்டார். மக்காவிற்கு தனது முதல் வருகையின் போது பாத்திமா, “உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது? நான் ஒரு நடுநிலை மனிதனாக குரானை படிக்க ஆரம்பித்தேன். அப்புறம்தான் எனக்கு உண்மை தெரிய வந்தது. இப்போது நான் என்னை விட இஸ்லாத்தை நேசிக்கிறேன்.

ஒரு முஸ்லிமாக இருப்பது ஒரு பெரிய பாக்கியம் மற்றும் மரியாதை” என்கிறார் இவர்.

பாத்திமா சபரிமாலாவின் பின்னணி

சபரிமாலா, அழகர்சாமி மற்றும் கலையரசிக்கு 1982 டிசம்பர் 26 அன்று மதுரையில் பிறந்தார். ஜெயகாந்தனை மணந்து ஜெயசோழன் என்ற மகனைப் பெற்றாள்.

சபரிமாலா தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் தனது கல்வியை முடித்தார், மேலும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள எள்ளேரி பள்ளியில் 2002 இல் பள்ளி ஆசிரியையாக சேர்ந்தார். தனது வேலையை விட தேசம் முக்கியம் என்று கூறி அரசு பள்ளி ஆசிரியை வேலையை விட்டுவிட்டார்.
நீட் தேர்வுக்கும் இவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை பேச்சாளராக, சபரிமாலா இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.

200க்கும் மேற்பட்ட மேடைகளில் பேனல் ஸ்பீக்கராக இருந்து, வேந்தர் டிவி, நியூஸ்7 டிவி, ஜெயா டிவி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தனது பேச்சுகள் வணிகத்திற்காக அல்ல, சமூக மாற்றத்துக்கானவை என்கிறார் ஃபாத்திமா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil motivational speaker sabarimala converts to islam after reading quran