மவுனம் கலைத்த கலையுலகம்: சூர்யாவுக்கு ஆதரவு யார், எதிர்ப்பு யார்?

Tamil News Update : உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி..”

Jaibhim Movie Issue update : தமிழ சினிமாவில் உச்சநட்சத்திரமான சூர்யா நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான படம் ஜெய்பீம். இருளர் இனமக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 9 கேள்விகளுடன் சூர்யாவிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிக்கைக்கு சூர்யா தரப்பில் பதில் கொடுத்துவிட்ட நிலையில், அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்ட பின்னரும் ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு நடிகர் சூர்யா 5 கோடி இழப்பீடு தரவேண்டும் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இதனால் ஜெய்பீம் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிஜவாழ்கையில் பாதிக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு 10 லட்சம் டெப்பாசிட் செய்வதாக சூர்யா கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில், திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தங்களது கருத்தக்களை பதிவிட்டு வருகினறனர்.  அதிலும் ஒரு சிலர் சூர்யாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், ராஜக்கண்ணு மனைவி பார்வதியின் நிஜவாழ்க்கை கதை மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்த நடிகர் சூர்யா, அனைவரும் கேள்வி எழுப்பிய பின்னர் லட்சங்களை தருவதாக கூறியுள்ளார் என்று நடிகையும் பாஜக கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சித்துள்ளார். விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி..” என்று விமர்சித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருபவர்களை “திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். why tension? Cool..” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டுள்ள அவர், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு,  ரஜினிகாந்த் சார் உங்களுக்கு இரண்டு பெரிய படங்களில் வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இயக்குனராக்கிவிட்டார்.. ரஜினி சாரை திமுக ஆதரிக்கும் Plip Plip YouTube channel தகாத வார்த்தைகளால் திட்டினார் விமர்சித்தார். நீங்களும் சினிமா துறையும் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை?

ஆனால் ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் என்ன? யார் யாரைப் பிரிக்கிறார்கள்? சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது. சாதி, மதம் இல்லாத ஒரே தொழில் சினிமா மட்டுமே.இப்போது அது தவறான கைகளுக்கு சென்றுவிட்டது. என்று கடுமையாக சாடியுள்ளார்.

ஆனால் திரைத்துறையை சேர்த்த இயக்குநர் பாரதிராஜா நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து பாடக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒவ்வொரு அரசியல்வாதியின் வாசலிலும் கதை சொல்ல படைப்பாளிகள் காத்திரக்க வேண்டுமா? திரைத்துறை அதன் இயல்பில் இயங்க விட வேண்டும் படைப்பு சுதந்திரம் தேவை என்று கூறியுள்ளார். ‘

தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே… சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா

நடிகர் இயக்குநர் பாடகர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தவறான காட்சி இருப்பதாக கூறி இருந்ததால், அந்த காட்சி உடனே படக்குழுவினரால் நீக்கப்பட்டது. அந்த முத்திரை இடம்பெற்றதற்கு சூர்யாவுக்கு சம்பந்தம் இல்லை.இதனால் உங்கள் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது நியாயம் இல்லை.இந்த செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அரசியல்,ஜாதி,மத,இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு கல்வி பணியாற்றும் சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் தனது ட்விட்டர் பக்கத்தில், சூர்யாவை சுற்றி வளைத்தப்படி கோடானக்கோடி கறுப்பு கரங்கள் இருக்கின்றன. அதனிடம் சிவப்புக்கொடிகள் பறக்கின்றன. அவைகள் நீல நிற வானத்தின் கீழ் அனைவரும் சமம் என அன்பை போதிக்கின்றன என்று கூறியுள்ளார்.

ஆனால் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் வ.கௌதமன், ஒரு படைப்பு என்பது எப்போதும் தனது சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் புண்படுத்தி விடக்கூடாது. ஒரு கலவரத்தை படைப்பாக்கலாம். ஆனால் ஒரு படைப்பு ஒருபோதும் கலவரத்தை உருவாக்கி விடக்கூடாது.

அந்தோணிசாமி என்கிற மிருகம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது. ஆனால் நீங்கள் அதனையும் தாண்டி அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக குருமூர்த்தி பெயரிட்டு குருவையும், அக்னிகுண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்துவதென்பது அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி நீங்கள் செய்த மாபெரும் தவறு என்று கூறியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் சூர்யாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil movie jaibhim issue update with celebrities statement

Next Story
தமிழக அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகம்… இலவச ப்ரமோஷன் என அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express