Wife Killed Husband For Sexual Harassment : ஈரோடு மாவட்டம் அந்தியூர் காளியண்ணன் தோட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (33). கூலி வேலை செய்து வந்த இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 4 மாதங்களில் அவரை பிரிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரிய மேலபாளையத்தை சேர்ந்த மைதிலி (21) என்ற பெண்ணுடன் நந்தகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் மைதிலியும் ஏற்கனவே திருணமாகி கணவனை பிரிந்த நிலையில், 2-வது முறையாக நந்தகுமாரை திருமணம் செய்துள்ளார்.
கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் நந்தகுமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை அளித்தும்அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவரது ரத்தத்தில், விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/nantha-kumar-mythili2.jpg)
உடனடியாக மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், நந்தகுமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஜனவரி 25-ந் தேதி வீட்டில் சாப்பிடும்போது உணவு கசப்பாக இருந்ததாகவும், அன்றில் இருந்துதான் தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் நந்தகுமாரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மைதிலி கணவர் பற்றிய விபரங்களை மட்டும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் கடந்த 15-ந் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபடுவார்கள் என்பதை அறிந்த மைதிலி, கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து மைதிலி அளித்த வாக்குமூலத்தில், திருமணமான நாள் முதல் எனது கணவர் இரவு பகல் பாராமல் என்னை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் நான் கர்ப்பமானினேன். ஆனாலும் அவரது தொந்தரவு எல்லை மீறி சென்றது. நான் கர்ப்பிணி என்றும் கூட பாராமல் அடிக்கடி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட நான், அவர் சாப்பிடும் சாப்பாட்டில் பூச்சி மருந்தை கலந்துவிட்டேன். இதனை சாப்பிட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அடிப்படையில், மைதிலியை கைது செய்த போலீசார், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். தற்போது மைதிலி 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"