முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என். ரவி தமிழ்நாட்டுக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துவருகிறார்.
திமுக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை சட்டப்பேரவையில் முழுமையாக வாசிக்கவில்லை. கலைஞர், முத்தமிழ் அறிஞர், பெரியார் போன்ற பெயர்களை தவிர்த்துவிட்டார்.
இந்த நிலையில் ஆளுனருக்கு எதிராக சென்னை முழுக்க நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுனருக்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார்.
தற்போதுவரை திமுகவினர் ஆளுனர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டில் அதிருப்தியாகவே உள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுனருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ஆளுனர் ஆர்.என். ரவியிடம் 13 மசோதாக்கள் நிலுவையில் இருப்பது ஆர்டிஐ மூலமாக தெரியவந்துள்ளது. இந்த மனுவை தி இந்து தாக்கல் செய்துள்ளது.
இந்த 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது ஆகும். இதற்கிடையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரவும் ஆளுனர் அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“