/tamil-ie/media/media_files/uploads/2021/05/tamilnaduassembly-759.jpg)
தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏகளுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடந்தது. 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. 124 இடங்களில் வென்ற திமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மே 7ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
இந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நாள் எப்போது என கேள்வி எழுந்த நிலையில் மே 11 நடக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்காக தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கு.பிச்சாண்டிக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக பிரதமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத் தொடர் கொரோனா தொற்று காரணமாக தலைமைச் செயலகத்தில் நடைபெறாமல். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். உறுப்பினர்கள் அனைவரும், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரை முருகன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.