scorecardresearch

ஆவின் பால் வாங்குறீங்களா? எந்த கலர் பாக்கெட்டில் என்ன சத்து தெரியுமா?

வைட்டமின் ஏ மற்றும் டி அதிகம் கொண்ட செறிவூட்டப் பட்ட பசும் பால், வைலட் நிற பாக்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

aavin tamil nadu

புதிதாக பதப்படுத்தப்பட்ட பசும்பால் விற்பனையை தமிழகத்தின் அரசு நிறுவனமான ஆவின் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம், தற்போது சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை தினமும் விற்பனை செய்து வருகிறது.

வைட்டமின் ஏ மற்றும் டி அதிகம் கொண்ட செறிவூட்டப் பட்ட பசும் பால், வைலட் நிற பாக்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

அரை லிட்டருக்கு ஒன்ரை கிராம் கொழுப்பு மற்றும் 3.4 கிராம் புரதமும், 4.9 கிராம் மாவு சத்தும் கொண்ட டயட் பாலை சிகப்பு நிற பாக்கெட்டில் ஆவின் விற்பனை செய்கிறது.

பச்சை நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலில், அரை லிட்டருக்கு 4.5 கிராம் கொழுப்பு மற்றும் 3.2 கிராம் புரதம், 4.7 கிராம் மாவு சத்தும், 700 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 74 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது.

வெளிர் நீல நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் நைஸ் பாலில், அரை லிட்டருக்கு 3 கிராம் கொழுப்பு மற்றும் 3.2 கிராம் புரதமும், 4.7 கிராம் மாவு சத்தும், 700 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 60 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது.

ஆரஞ்சு நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் பிரீமியம் பாலில், அரை லிட்டருக்கு 6 கிராம் கொழுப்பு மற்றும் 3.4 கிராம் புரதமும், 4.9 கிராம் மாவு சத்தும், 740 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 90 கிலோ காலரி அளவுக்கு சக்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu aavin milk packet colour and nutrients details