Advertisment

‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் அறிமுகம்; வேளாண் பட்ஜெட்டில் ரூ. 206 கோடி ஒதுக்கீடு

வேளாண் பட்ஜெட்டில் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்; ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு; எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

author-image
WebDesk
New Update
TN Agri Budget 2024

வேளாண் பட்ஜெட்டில் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மண் வளத்தை காக்க ரூ. 206 கோடி மதிப்பீட்டில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, மண் வளத்தை காக்க மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை அறிமுகம் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது;

மண்வளத்தை பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படும்.

இதில், பசுந்தாள் உர உபயோகத்தினை ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு இறவைப் பாசன பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயன் அடைவர்.

இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் மத்திய-மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

37,500 ஏக்கர் களர் நிலங்களை சீர்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், 37,000 ஏக்கர் அமில நிலங்களை சீர்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.

மண்புழு உரத்தை ஊக்குவிக்கும் வகையில், 10000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுகைகள் வழங்கிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2 லட்சம் விவசாயிகளுக்கு 10 லட்சம் ஏக்கரில் பயிர் இடுவதற்காக 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

'வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2024-25 ஆம் ஆண்டு ’முதல் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் செயல்படுத்தப்படும். 2024-25 ஆம் ஆண்டுக்கு மொத்தம் 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Agriculture Tamil Nadu Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment