முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் நாள் தோறும் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் ஆட்சியில் இருந்தது முதல், ஒபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல், தேர்தல் முடிவுக்கு பின் அறிக்கை மோதல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ வெளியீடு என அதிமுக வட்டாரத்தில் நாள்தோறும் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு இருந்தாலும் கட்சி என்று வரும்போது இருவரும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையே இதற்கு முக்கிய சான்றாக உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியல் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா தற்போது மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு அஸ்திவாரம் போடும் வகையில் முதற்கட்டமாக அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் அவர் போனில் பேசிய ஆடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆடியோவில் சசிகலா பேசியது அம்முக நிர்வாகிகளிடம் என்று இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பு கூறி வந்தாலும், அதிமுக நிர்வாகிகளுடன்தான் சசிகலா பேசினார் என்து அவர்களின் நடவடிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமாக எடப்பாடி கே பழனிசாமி அதிமுகவில் தனது நிலைபாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
இதில் நேற்று நடைபெற்ற அதிமு எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சிக்கு அலுவலகப் பொறுப்பாளர்களை நியமிப்பதில் நியமிப்பதில் தொடங்கி, சசிகலாவுக்கு எதிராக கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அணி திரண்டது வரை எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைபாட்டை அதிமுகவில் வலுவாக ஊன்றியுள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களில் ஒருவரை சட்டமன்றத்தில் கட்சி கொறடாவாக நியமிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வம் பேரம் பேசியதாக கூறப்பட்ட நிலையில் எதிர்கட்சி தலைவராக இபிஎஸ் தனது ஆதரவாளர் எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற கொறடாவாக நியமித்தார்.
மேலும், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே, பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அதிமுக தரத்திற்கு ஒரு வலுவான அணியாக இருக்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொடர்பு கொண்ட எவருக்கும் கட்சியில் இடமில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் சசிகலாவுடன் தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் உட்பட 15 நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சட்டமன்றக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முன்பாக, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் மூத்த செயற்பாட்டாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பின், எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான ஒரு வலுவான தீர்மானம் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோரால் கூட்டாக முன்மொழியப்பட்ட நிலையில், இதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் அளித்த ஆதரவைக் கண்ட சசிகலா அரசியல் முக்கியத்துவத்தை அறிந்து கட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். அதிமுக ஒரு மக்கள் இயக்கமாக தொடரும். இது ஒரு குடும்பத்தின் விருப்பத்திற்காக என்றைக்கும் செயல்படாது " என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானத்தில் சசிகலாவுடன் உரையாடுவதன் மூலம் கட்சிக்கு அவதூறு விளைவித்த அனைவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,
இந்த தீர்மானத்தின் படி சசிகலாவுடன் பேசிய 15 செயல்பாட்டாளர்களை வெளியேற்ப்பட்டனர். இதற்கிடையில், அதிமுகவின் 15 செயல்பாட்டாளர்களை வெளியேற்றிய சில மணி நேரங்களில், சசிகலா, மதுரையை சேர்ந்த மற்றொரு அதிமுக செயலாளருடன் தொலைபேசியில் பேசினார். உரையாடலில், “1989 ஆம் ஆண்டில் கட்சியில் இதுபோன்ற பல முன்னேற்றங்களை நாங்கள் கண்டோம், இறுதியாக வென்றோம். அதேபோல், நாங்கள் வெல்வோம். கவலைப்பட வேண்டாம். நான் கட்சி ஊழியர்களுடன் இருப்பேன், அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று சசிகலா பேசியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.