திருநெல்வேலி அதிமுக போஸ்டர் யுத்தம்: இபிஎஸ் தரப்பு நாகரீக பதிலடி

EPS OPS Unity Poster : அதிமுகவில் ஒபிஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெல்லை அதிமுகவினரின்போஸ்டர் அமைந்துள்ளது.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஈபிஎஸ் ஓபிஎஸ் என இரட்டை தலைமையில்  கட்சியும் ஆட்சியும் நடைபெற்று வந்தது. ஆனால் வெளியில் இவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது.  இந்த போர் அவ்வப்போது வெளியில் தெரியவும் தொடங்கியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த்து வரை இந்த மோதலை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அதிமக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருவரும் தனித்தனியாக அறிக்கை விடுவதில் தொடங்கி பல நிகழ்வுகளில் இருவருக்கும் இடையே மோதல் வெளிப்பட்டது. ஆனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவில் எந்த மோதலும் இல்லை. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவதாக கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வெளியாகியுள்ள போஸ்டர் இந்த மோதலுக்கு பதிலடி கொடுக்கும விதமாக அமைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான தொடர்ச்சியான மோதல்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் தெருக்களில் பரவியிருந்தன.

இந்த மோதல் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பழனிசாமியின் ஆதரவாளர்கள் சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியின் தேர்வை கொண்டாடும் வகையில்,போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராக பழனிசாமியை தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமா இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இரு தலைவர்களும் ஒன்றுபட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் இந்த போஸ்டரில்  பன்னீர்செல்வத்தின் புகைப்படமும் இடம்பெறுள்ளது.

இரண்டு முறை தமிழ்நாட்டின் இடைக்கால முதல்வராக செயல்பட்ட பன்னீர்செல்வம், 2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்தபோது மூன்றாவது முறையாக முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த இரு மாதங்களில் அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலாவின் ஆதரவு பெற்ற பழனிச்சாமி, பிப்ரவரி 2017 இல் முதல்வராக நியமிக்கப்பட்டார், தொடர்ந்து ஆகஸ்ட் 2017 இல் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி இருவரும் இணைந்ததை தொடர்ந்து பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்

தொடர்ந்து கட்சியில் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமியும செயல்பட்டு வருகின்றனர். இதில் கட்சயின் எந்த விவகாமாக இருந்தாலும இவர்கள் இருவரும் முடிவு செய்வார்கள் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் “கட்சி எதிர்ப்பு செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

சட்டசபையில் 66 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுக, ஜூன் 14 ம் தேதி கூடி கட்சியின் அலுவலர்கள், துணைத் தலைவர்,  பொருளாளர் மற்றும் சட்டமன்றக் கட்சியின் செயலாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும். இந்த சந்திப்பு நேரில் நடைபெறுவதால், கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தை நடத்துமாறு கட்சி அதிகாரிகளை கேட்டுள்ளது.

கடைசியாக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தபோது, ​​இருவரது ஆதரவாளர்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தலைவர்களுக்கிடையேயான உறவை மேலும் மோசமாக்கியதால், வி.கே.சசிகலா இதனை தனது நன்மைக்காக பயன்படுத்திக்கொண்டு கட்சியில் ஒரு தலைமைப் பாத்திரத்திற்குத் திரும்பும்படி அவரிடம் கேட்கும் கட்சிக்காரர்களுடன் அவர் பேசும் ஆடியோ கிளிப்களை அவரது குழு வெளியிட்டது. மேலும் அவர் கடசிக்குள் திரும்பி வந்து ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னெடுப்பேன் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். இது தொடர்பாக பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து பழனிசாமி உள்ளிட்ட பல அதிமுக தலைவர்களின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இது  அதிமுகவின் கோட்டை, இங்கே குழப்பத்திற்கு இடமில்லை,” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu aiadmk party eps ops unity poster in nellai district

Next Story
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: புதிய தளர்வுகள் முழு விவரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com