கருணாநிதி தொடுக்காத வழக்குகளா? எதையும் சந்திப்போம்: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டறிக்கை

Tamilnadu News Update : ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Tamilnadu News Update : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதைனை நடத்தி வருகினறனர். இதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்கு பிற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 5 வது அமைச்சர் மற்றும் 6-வது அதிமுக பிரமுகர் தங்கமணி ஆவார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜபாசகர், சி.விஜயபாஸ்கர்,  உள்ளிட்ட அமைச்சர்கள் வீடுகளிலும் அதிமுக பிரமுகர் சேலம் இளங்கோ ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நிலையில், தற்போது இந்த பட்டியலில் 6-வது நபராக தங்கமணி இணைந்துள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தங்கமணி வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில், திமுகவினர் அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். “எதிர்க்கட்சியான அதிமுக வலுவடைந்து வருவதாக மாநில உளவுத்துறை மூலம் திமுகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளும்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். இதன காரணாக காவல்துறையை தவறாக பயன்படுத்த நிர்ப்பந்தித்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதுபோன்ற சோதனைகளால் பயமுறுத்தப்பட வேண்டும்.

50 ஆண்டுகால அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில்,  ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றன இரு பெரும் தலைவர்கள் சந்திக்காத சோதனைகள் அல்ல சந்திக்காத வழககுகள் அல்ல சந்திக்காத துரோகங்கள் அல்ல… அவர்கள் வழியில் அவர்கள் பாசறையில் பயின்ற நாங்களும், எங்களின் கழக உடன்பிறப்புகளும், உஙகளுடைய இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடராத வழக்குகளா? எங்களுடைய அம்மா வெற்றி பெறாத வழக்குகளா? அந்த வழியில தாய்வழி உறவுகள் எல்லாம் ஒன்றிணைந்து இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றிபெறுவோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு அளிக்கப்பட்ட விருப்புரிமையை தவறாக பயன்படுத்த துவங்கி, காவல்துறையை ஒழுங்குபடுத்தும் இலாகாவை தன்வசம் வைத்துள்ளார். மேலும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைகள் திமுக முதல் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை திசை திருப்பும் கண்துடைப்பு மட்டுமே இதுபோன்ற அரசியல் பழிவாங்கலை நிறுத்திவிட்டு, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu aiadmk statement against dmk for former minister thangamani house raid

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com