tamil nadu all court process to be stop until april 30
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழைய தடை விதிப்பு.
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வருகிற 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கமிட்டி அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகம் உள்ள
Advertisment
Advertisements
நீதிமன்ற பணிகளையும் நிறுத்திவைப்பது எனவும் தற்போது என்ன நிலை உள்ளதோ அதே நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 30-ம் தேதி வரை முக்கிய வழக்குகளை மட்டும் நீதிமன்றங்கள் வீடியோ காணலபரன்சிங் மூலம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதிகள் அவர்களது வீட்டிலிருந்து வழக்குகளை விசாரிப்பார்கள் அனைத்து வழக்குகளையும் இணையதளம் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும், இமெயில் மூலமாக வழக்குகளை அனுப்பலாம்.
எனவே சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜெனரல் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”