scorecardresearch

இரட்டை இலை சின்னம் வழக்கு : டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை விசாரணை

Tamilnadu News : ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி டிடிவி தினகரன் கடிதம் அளித்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார்

இரட்டை இலை சின்னம் வழக்கு : டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை விசாரணை

Tamilnadu News Update : கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெற இடைத்தரகரான சுகேஷ் சந்திர கேசர் என்பரிடம் லஞ்சம் கொடுத்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இநத வழக்கில் கைது செய்யப்பட்டு 2 மாதங்கள் சிறையில் இருந்த டிடிவி தினகரன் பிறகு ஜாமீனில் வெளி வந்தார் அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், டிடிவி தினகரன் பெயர் இடம் பெறாததால், இந்த வழக்கை டெல்லி போலீசார் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், பெண் தொழில் அதிபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனுடன் சேர்த்து இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கையும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து *ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி டிடிவி தினகரன் கடிதம் அளித்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார்

அவரிடம் இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கு  மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளது.இந்த விசாணை முடிவில் டிடிவி தினகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சட்டு நிரூபிக்கப்படடால், அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துளளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu ammk general secretary ttv dinakaran in delhi appears