/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-26T104753.722-1.jpg)
Tamil nadu, Tamil nadu assembly, assembly news, assembly news in tamil, edappadi palanichami, dmk, stalin
தமிழக சட்டசபையின் இரண்டாவது அமர்வு கூட்டம், மார்ச் மாதம் 9ம் தேதி கூட உள்ளதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் 2020ம் ஆண்டிற்கான சட்டசபை முதல் சட்டசபை கூட்டம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கியது. பிப்ரவரி 14ம் தேதி,நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ( பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
குடியுரரிமை திருத்த சட்டம், வேளாண் பாதுகாப்பு மண்டலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின், 20ம் தேதி கூட்டத்தொடர் முடிவடைந்தது.
இந்நிலையில், சட்டசபை தொடரின் 2வது அமர்வு வரும் மார்ச் 9 ல் துவங்க உள்ளதாக சட்டசபை செயலர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. எப்போது வரை தொடர் நடக்கும் என அறிவிக்கப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.