Tamil Nadu Assembly Election Polling Updates : பிரதமர் மோடி கொடுத்த அழுத்தம் காரணமாக சுஷ்மா, ஜெட்லி மரணம் அடைந்ததாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின், இன்று மாலைக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி (நாளை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த பிப்ரவரி 11-ந் தேதி கூடிய இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டது.
தொடர்ந்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 12-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழக அரசியல் வரலாற்றில்ல் முதல்முறையாக இந்த தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான், என 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஒரு வாரம் நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ந் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து மார்ச் 20-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது. இதில் ஒரு சில வேட்பாளர்களின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்றுகெகொள்ளப்பட்ட நிலையில், ஒரு சிலரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
அடுத்து வேட்பாளர்கள் அனைவரும் தங்களதுதொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியின் முன்னணி தலைவர்களும், தேசிய கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப்ப்பட்டது. மேலும் வாக்காளர்களின் பூத் சிலிப் விநிகோகிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை (ஏப்ரல் 6) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வாக்குசாவடிக்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஒரு வாக்குச்சாடிக்கு 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களார்கள் அனைவரும் முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும் நிலையில், இந்த தேர்தலில் ஒரு மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
“பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தையும் சித்திரவதையையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் அருண் ஜெட்லியும் சுஷ்மா ஸ்வராஜும் இறந்துவிட்டார்கள்” என்ற அறிக்கை குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் தனது அறிக்கையை அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
சத்ய பிரதா சாகு பேட்டி: “தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் நாளைதான் துல்லியமாக வெளியாகும். அதற்கு முன்பு தொலைபேசிய வழியாக பெற்ற தகவல்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளன” என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாகு, “தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது.” என்று கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி கவச உடை அணிந்துகொண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனியார் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தார்.

திருவள்ளூர் 61.96%
சென்னை 55.31%
காஞ்சிபுரம் 62.96%
வேலூர் 67.30%
கிருஷ்ணகிரி 65.98%
தருமபுரி 68.35%
திருவண்ணாமலை 68.04%
விழுப்புரம் 68.97%
சேலம் 66.98%
நாமக்கல் 70.79% என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி: “தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79% வாக்குகள் பதிவாகியுள்ளது” என்று கூறினார்.
புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாமில் 85.76% வாக்குப்பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி: “தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இதுவரை 174 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 134 கட்டுப்பாட்டு கருவிகளும் 559 விவிபாட் இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளன” என்று கூறினார்.
சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் இசையமைப்பாளர் அனிருத் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை – கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஆண்ட்ரியா தனது வாக்கை பதிவு செய்தார்.
👆🏻🗳 #ivoted pic.twitter.com/FtH4Or14uG
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 6, 2021
நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் சென்று தேர்தலில் வாக்களித்துள்ளார். வாக்களித்தபின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேனி – போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 50.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 65.11% வாக்குகள் பதிவாகியுள்ளன
நடிகை திரிஷா மற்றும் நடிகர் அர்ஜூன் ஆழ்வார்பேட்டை பகுதியில் தங்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். மதுரையில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா வாக்களித்தார். வாக்களித்த அவர், தேர்தல் துவங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை இடைவிடாது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறேன். இந்திய குடிமகன் என்பதை பெருமையாக கருதுகிறேன் என்று பாப்பையா பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நேரம் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு திரும்ப கால தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் நாளை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புடன் பணம் வழங்கிய திமுகவைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
செஞ்சி அருகே நல்லான் பிள்ளைபெற்றாள் கிராம வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு அருகே வந்த இருசக்கர வாகன கண்ணாடியை போலீசார் உடைத்தாக கூறி, பொதுமக்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் பேட்டியளித்த அவர், சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்று கூறினார். இதேபோல் நடிகர் ஜெயம் ரவி சென்னை டி.டி.கே சாலையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லஸ் கார்னர் அருகிலுள்ள வாக்குச்சாவடியில் முகக்கவசம் அணியாமல் அதிகளவில் கூடியிருந்த திமுகவின் பூத் ஏஜெண்டுகளை, அந்த வழியாக வந்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 53.01% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் புதுச்சேரியில் 53.30%, காரைக்காலில் 52.14%, மாஹேயில் 44.28%, ஏனாமில் – 54.90% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சித்தார்த் வாக்களித்தார். இதேபோல் சென்னை தி. நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 32.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக பட்சமாக விருதுநகரில் 42.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் ‘தனிநபரை விட கட்சி பெரியது, கட்சியை விட தேசமே பெரியது’ என்று கூறியுள்ளார். இந்நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பெரியார் சிந்தனைகளை தொகுத்து தமிழ் சமுதாயத்திற்கு வழங்கிய பெரியார் இயக்க போராளி வே. ஆனைமுத்து இன்று மரணமடைந்தார்.
ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த 5 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
பரபரப்பாக நடந்துவரும் சட்டப்பேரவை வாக்கெடுப்பில் சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் டிடிவி தினகரன் தன் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் யோகி பாபு வாக்களித்தார். மேலும், மதுரை திருப்பரங்குன்றம் வாக்குச்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி., சு.வெங்கடேசன் வாக்களித்தார்.
நெல்லை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 20.98% வாக்குகளும் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 28.33% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அரக்கோணம் அடுத்த சித்தாம் பாடி – அம்பேத்கர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி, கருப்பு கொடியுடன் தேர்தலைப் புறக்கணித்தனர் அப்பகுதி மக்கள்.
கோவை தெற்கு தொகுதியை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்தனர் கோடங்கிபட்டி கிராம மக்கள்.
நடிகர் விக்ரம் வாக்களிக்க வந்த சென்னை பெசன்ட் நகர் வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார்
தென்காசி சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்தார். மந்தைவெளி வாக்குச்சாவடியில் குஷ்பு தற்போது வாக்களித்தார். தன்னுடைய இரு மகள்களுடன் வந்து வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், ஒரு மாதம் வாக்குப் பெட்டியை பாதுகாப்பது என்ன நடக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் அதிகபட்சமாக காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23% வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 9.98% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13.8% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலு்ககான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அ்ந்த வகையில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதனை சுட்டிக்காட்டும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், நடிகர் விஜய், இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்களித்தார்
தமிழக சட்டபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாக்களிக்க வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டசபை தோதல் வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி வாக்களித்தார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 7.45 மணியளவில் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்யவிருக்கிறார்