scorecardresearch

எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் – ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்

Minister Rajendra Balaji : முதல்வரும் துணை முதல்வரும் முதல்வர் பற்றிய பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tamil nadu, assembly election, Edappadi Palanichami, CM candidate, admk., minister Rajendra balaji, party supremo, minister sellur raju, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

2021ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியோ, திமுக ஆட்சியோ எப்போதுமே முதல்வர் யார் என்பதில் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. கருணாநிதி இருந்தவரைக்கும் திமுக ஆட்சி என்றால் அவர்தான் முதல்வர் அதே போல அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவர்தான் இறுதிவரை முதல்வராக இருந்தார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என மாறி மாறி முதல்வராகி விட்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினர் தயராகி வருகின்றன.

புயல்வேகத்தில் அதிமுக – செல்லூர் ராஜூ : சட்டசபை தேர்தல் களத்தில் அதிமுகவும் புயல் வேகத்தில் இருப்பதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் வெற்றிக்கு பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை முடிவு செய்வோம் என்று கூறினார். இது அதிமுகவில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜேந்திரபாலாஜி அதிரடி : இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடியார்தான் என்றும் முதல்வர் என்று கூறியுள்ளார்.

முதல்வரும் துணை முதல்வரும் முதல்வர் பற்றிய பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu assembly election edappadi palanichami cm candidate admk minister rajendra balaji