Tamil Nadu Assembly elections : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி அன்று தேர்தல்கள் நடைபெற உள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை ஆற்றி வருகின்றனர். நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வருகை புரிந்தார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். 5 மாநில தேர்தல் குறித்த கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தஞ்சையில் கொரோனா நிலவரம்
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் தனியார் பள்ளியில் பயின்ற 6 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே போன்று ஆடுதுறை தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தல்
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா காலம் என்பதால் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் 47 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் வாக்குபதிவு காலை 7 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளாக அசாமில் ஆட்சி செய்து வந்ததால் அக்கட்சிக்கு இது மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:53 (IST) 27 Mar 2021அமைச்சர் கே.சி. வீரமணி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு
தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பறக்கும்படை நடத்திய சோதனையில் காரில் வேட்டி சட்டைகள் பறிமுதல் செய்யபட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 21:50 (IST) 27 Mar 2021எங்களை அடிமை என்று சொல்றாங்க.. தயவு செஞ்சி அதை நம்பாதீங்க.. - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “எங்களை அடிமை என்று சொல்றாங்க... தயவு செஞ்சி அதை நம்பாதீங்க.. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக நாங்க இருக்க மாட்டோம்” என்று பேசியுள்ளார்.
- 19:58 (IST) 27 Mar 2021ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து எய்ம்ஸ்க்கு மாற்றம்
நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வருகிற 30ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 18:21 (IST) 27 Mar 2021தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,241 பேர் குணமடைந்துள்ளர். கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை மொத்தம் 8,77,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,659 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 17:39 (IST) 27 Mar 2021முதல்வரை விமர்சிக்கவில்லை - ஆ.ராசா விளக்கம்
முதல்வர் பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது புகார் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
- 17:36 (IST) 27 Mar 2021தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 17:22 (IST) 27 Mar 2021திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக உறுப்பினர்கள், மக்களிடையே பரப்புரை செய்யும்போது மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 16:09 (IST) 27 Mar 2021மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும் - விஜய்வசந்த்
தமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இதில் பாஜக சார்பில் பொன் ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஜய் வசந்த் மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும் என்று என்று கூறியுள்ளார்.
- 15:11 (IST) 27 Mar 2021ஆ.ராசா மீது தேர்தல் ஆணைத்தில் புகார்
முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என அதிமுக வலியறுத்தியுள்ளனர்.
- 14:17 (IST) 27 Mar 2021எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை - டி.ராஜேந்தர்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
- 14:14 (IST) 27 Mar 2021குடியரசுத்தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்?
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளது உள்ளது என்றும், அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 14:12 (IST) 27 Mar 2021வங்கதேச சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வங்கதேசம் - பங்கபந்து கல்லறையில் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்
- 14:10 (IST) 27 Mar 2021கமல்ஹாசன், வானதி சீனிவாசன் நேரடி விவாதம் - ஸ்மிரிதி இரானி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளனன. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
- 14:05 (IST) 27 Mar 2021மேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு
மேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்களின் முதற்கட்ட வாக்குப்பபு இன்று நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 40.73% வாக்குகளும், அசாமில் 37.47% வாக்குகளும் பதிவுவாகியுள்ள.
- 14:01 (IST) 27 Mar 2021குடியரசுத் தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நெஞ்சுவலி காரணமாக நேற்று ராணுவ மருத்துவ மனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- 13:58 (IST) 27 Mar 20212021 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு!
2021 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெளியிட்டுள்ளது
We will take the field in ipl2021 wearing our colours with pride! 👕✨
— Mumbai Indians (@mipaltan) March 27, 2021
🗣 पलटन, तयार का? 😎
Pre-order - https://t.co/Oo7qj5m4cNonefamily mumbaiindians pic.twitter.com/2sXlDg97XQ - 13:55 (IST) 27 Mar 2021திமுக யாரை எதற்காக எதிர்க்க வேண்டுமோ, அவர்களை அதற்காக எதிர்க்கிறது - கனிமொழி எம்.பி. பிரசாரம்
சகோதரத்துவத்துடன் வாழும் சிறுபான்மையினரை சாதி, மத பெயரை சொல்லி பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்துகிறது. எனவே அவர்களை அதற்காக எதிர்க்கிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாகையில் நடந்த பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
- 13:52 (IST) 27 Mar 2021மேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு
மேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவை தேர்தல்களின் முதற்கட்ட வாக்குப்பபு இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 36.09% வாக்குகளும், அசாமில் 25.88% வாக்குகளும் பதிவுவாகியுள்ள.
- 13:36 (IST) 27 Mar 2021மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுஹாசினி மணிரத்னம் வாக்கு சேகரிப்பு
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளோடு இணைந்து 234 தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதனையடுத்து அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இயங்குநர் மணிரத்தின் மனையும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- 12:32 (IST) 27 Mar 2021பறக்கும் படை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் முறையாக பணியாற்றாத பறக்கும் படை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் கிருஷ்ண கெடியா அளித்த புகாரின் பேரில் கோவை ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- 12:02 (IST) 27 Mar 2021கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவில்லை
தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 11:52 (IST) 27 Mar 2021முதற்கட்ட வாக்குப்பதிவு
மேற்குவங்க சட்டப் பேரவை தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் 16.41% வாக்குகள் காலை 11 மணி வரை பதிவாகியுள்ளது. அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 15.39% வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 11:27 (IST) 27 Mar 2021gold price today
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33,856க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,232க்கு விற்பனை ஆகிறது.
- 11:18 (IST) 27 Mar 2021காளி கோவிலில் தரிசனம் செய்த மோடி
வங்கதேசத்திற்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஐஸ்வரிப்பூரில் உள்ள ஜெசோரேஷ்வரி காளி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.
- 10:37 (IST) 27 Mar 2021சச்சினுக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்டரில் அறிவிப்பு.
pic.twitter.com/dOlq7KkM3G
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021 - 10:15 (IST) 27 Mar 2021திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களம் இறங்கும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது என்றும், திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் என்றும் பழனிசாமி பேச்சு.
- 10:03 (IST) 27 Mar 2021கொரோனா தொற்று
கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டப்பாகியுள்ளது.
- 09:32 (IST) 27 Mar 2021கர்நாடக அமைச்சர் பாலியல் சிடி விவகாரம்
கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மீது பாலியல் சி.டி.விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மூலம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.
- 09:29 (IST) 27 Mar 2021தமிழகம் மின்மிகை மாநிலம் என எப்படிச் சொல்லமுடியும்? - ப.சிதம்பரம் கேள்வி
தமிழகத்தின் மின்சார தேவையில் 50% மட்டுமே தமிழகத்தில் உற்பதியாகிறது. மிச்சம் 50% வெளிமாநிலங்களில் இருந்து நாங்கள் வாங்குகின்றோம். இந்நிலையில் தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல என்று ப.சிதம்பரம் பேச்சு
- 09:07 (IST) 27 Mar 2021வானதி சீனிவாசன் பிரச்சாரம்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் இன்று காலை கோவை ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு தொகுதி ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தேன்kovaisouthvanathi4kovaisouth pic.twitter.com/RpoCJPYsm3
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 27, 2021 - 08:52 (IST) 27 Mar 2021தமிழகத்தில் இதுவரை ரூ. 55 கோடி பணம் பறிமுதல்
தமிழகத்தில் தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் ரூ. 55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.