Advertisment

News Highlights: ஸ்டாலின்தான் தமிழகத்தின் தடுப்பூசி- கி.வீரமணி

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: ஸ்டாலின்தான் தமிழகத்தின் தடுப்பூசி- கி.வீரமணி

Tamil Nadu Elections live updates : கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருக்கும் பிரேமலதா தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரேமலதாவின் சகோதரரும் தேமுதிக துணைச் செயலாளருமான எல்.கே. சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேமலதாவுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் கூற அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்கே சிறிது நேரம் குழப்பம் நீடித்தது.

Advertisment

பிரேமலதா இருக்கும் இடத்திற்கே சென்று மாதிரிகளை பெற்ற சுகாதாரத்துறையினர், அவரை தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டு நேற்று இரவு வரை பிரச்சாரம் மேற்கொண்டார். கொரோனாவை காட்டி பயமுறுத்துகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் பயம் கிடையாது. பனங்காட்டு நரிகள் நாங்கள் என்று பரப்புரையில் பேசியுள்ளார் பிரேமலதா.

மிரட்டும் கொரோனா; ஹாட்ஸ்பாட்டாக மாறிய தஞ்சை

தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் இதுவரை 187 பள்ளி மாணவர்கள், 38 கல்லூரி மாணவர்கள் என இதுவரை மொத்தமாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 110 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:44 (IST) 25 Mar 2021
    எ.வ.வேலுவின் இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு; ரூ.3.5 கோடி பறிமுதல் என தகவல்

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவண்ணாமலையில் காலை 11 மணி முதல் தற்போது வரை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



  • 19:59 (IST) 25 Mar 2021
    ‘234 தொகுதிகளிலும் நாமதான் வெற்றி பெறப் போகிறோம்’ - மு.க.ஸ்டாலின்

    செஞ்சியில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “200 இல்ல.. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாமதா வெற்றி பெறப் போகிறோம்; அதில் எந்த மாற்றமும் கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:57 (IST) 25 Mar 2021
    கொரோனாவைவிட கொடியது அதிமுக - பாஜக கூட்டணி - தி.க. தலைவர் கி.வீரமணி விமர்சனம்

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “கொரோனாவைவிட கொடியது அதிமுக - பாஜா கூட்டணி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் தடுப்பூசி” என்று கூறினார்.



  • 18:36 (IST) 25 Mar 2021
    தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோன தொற்றில் இருந்து 1,027 குணமடைந்தனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 18:33 (IST) 25 Mar 2021
    கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் மற்ற கட்சிகள் செய்யாததை நாங்கள் செய்தோம் - ஸ்டாலின்

    தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா கால கட்டத்தில் தமிழகத்தில் மற்ற கட்சிகள் செய்யாததை நாங்கள் செய்தோம்; எங்கள் கட்சி கொரோனாவால் அன்பழகனை இழந்துள்ளது” என்று கூறினார்.



  • 17:18 (IST) 25 Mar 2021
    வீட்டு காவலில் கருணாஸ் சிறை வைப்பு

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், சிவகங்கை வரவுள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கருணாஸ் கைது செய்யப்பட்டு சிவகங்கையை அடுத்துள்ள பனங்காடி பகுதியில் உள்ள அவரது தோட்ட வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.



  • 15:53 (IST) 25 Mar 2021
    தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம்

    தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



  • 15:46 (IST) 25 Mar 2021
    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து

    தமிழிகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.



  • 14:47 (IST) 25 Mar 2021
    அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனை ஜாமீன்

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த‌தாக தொடரப்பட்ட வழக்கில் திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 14:46 (IST) 25 Mar 2021
    முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம்

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி, "திமுக ஆட்சிக்கு வந்தால் வியாபாரிகள் நிம்மதியாக இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.



  • 14:44 (IST) 25 Mar 2021
    பதட்டமான வாக்குச்சாவடிகள் அதிகரிக்க வாய்ப்பு

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 14:20 (IST) 25 Mar 2021
    அரசுப் பள்ளி மாணவர் உள் ஒதுக்கீடு - மத்திய அரசு எதிர்ப்பு!

    மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் புதுவை அரசின் சட்டவிரோதம் என்று நிராகரித்து விட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தகவல் அளித்துள்ளது.



  • 14:09 (IST) 25 Mar 2021
    தஞ்சை கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

    தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் 187 பள்ளி மாணவர்கள், 38 கல்லூரி மாணவர்கள் என 225பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 110 மாணவர்கள் குணமடைந்துள்ளனர்.



  • 13:57 (IST) 25 Mar 2021
    தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

    விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு தொற்று உறுதியான நிலையில், அக்கட்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 13:40 (IST) 25 Mar 2021
    அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின்

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த‌தாக தொடரப்பட்ட வழக்கில், திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது



  • 13:08 (IST) 25 Mar 2021
    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு

    மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரநாத், மற்றும் மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



  • 12:24 (IST) 25 Mar 2021
    திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளார் வீட்டில் சோதனை

    திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட இருக்கும் திமுக வேட்பாளார் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 11:44 (IST) 25 Mar 2021
    தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் எங்கே?

    தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்க்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவசர வழக்காக நாளை விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.



  • 11:44 (IST) 25 Mar 2021
    தங்கம் விலை அதிகரிப்பு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 அதிகரித்து ரூ.33,880க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ. 4235 ஆகும்.



  • 10:48 (IST) 25 Mar 2021
    அதிமுக வேட்பாளர் அமைதியானவர், பண்பானவர் - எடப்பாடி பழனிசாமி

    மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளார் கோபலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளார் அராஜகமானவர் ஆனால் அதிமுக வேட்பாளர் அமைதியானவர் என்று பரப்புரையில் பேச்சு.



  • 10:05 (IST) 25 Mar 2021
    ஒரே நாளில் 53,476 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 251 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்தமாக இந்தியாவில் இதுவரை 1,17,87,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,12,31,650 பேர் குணமடைந்துள்ளனர்



  • 09:51 (IST) 25 Mar 2021
    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

    தமிழக தேர்தல் ஆணையம் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 3998 வேட்பாளார்கள் களம் இறங்குகின்றனர். அதில் ஆண்கள் 3585, பெண்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2 போட்டியிடுகின்றனர். மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 7255 வேட்புமனுக்களில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் மட்டும் அதிகமாக 77 நபர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். சென்னை ஆர்.கே. நகரில் 31 பேரும், சைதையில் 30 பேரும் போட்டியிட உள்ளனர்.



  • 09:38 (IST) 25 Mar 2021
    தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு நெகடிவ்

    கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு கொரோனா சோதனை நேற்று செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடலூர் மாவட்ட சுகாதார அதிகாரி தகவல்.



  • 09:15 (IST) 25 Mar 2021
    இரண்டாவது நாளாக குறைந்த பெட்ரோல் விலை

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 18 காசு விலை குறைந்து ரூ.92.77க்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 19 காசு விலை குறைந்து ரூ. 86.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 வாரங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 2 ஆவது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது.



  • 09:02 (IST) 25 Mar 2021
    கொரோனா

    காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக 40 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது 52 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.



  • 09:00 (IST) 25 Mar 2021
    தமிழுக்கும் தமிழர்க்கும் மத்திய அரசு செய்த துரோகத்தின் உச்சம் - கமல்

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்திய அரசு வெளியேறியது. இதற்கு கண்டனங்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன்

    ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.

    — Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2021


  • 08:37 (IST) 25 Mar 2021
    பங்குனி உத்திரம்

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருக்கும் ஆழித்தேர், பங்குனி உத்திரத்திற்காக முக்கிய வீதிகளில் பவனி வருகிறது.



Tamil Nadu Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment