Live

News Highlights: மாஸ்க் அணிவதை மக்கள் மறந்ததால் கொரோனா பரவல்- ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

5 மாநில தேர்தல் குறித்து அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu Covid19 vaccination daily Report Chennais caseload crosses 10,000

Tamil Nadu Assembly Elections 2021 updates : வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவண்ணாமலை எ.வ. வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இன்று இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

15 மாதங்கள் கழித்து வெளிநாட்டிற்கு பயணம் சென்ற மோடி

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு அரசியல் நிகழ்வு எதற்கும் செல்லாமல் இருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.

தமிழகம் வருகிறார் ப்ரியங்கா காந்தி

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி நாளை (மார்ச் 27) தமிழகம் வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
4:56 (IST) 26 Mar 2021
உள்நோக்கத்துடன் ஐடி ரெய்டு -திமுக வேட்பாளர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை இன்று முடிவடைந்தது.

இது குறித்து எ.வ.வேலு, “தேர்தல் பணி செய்யவிடாமல் பரப்புரையை முடக்குவதற்காகவே கடந்த 2 நாட்களாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

4:10 (IST) 26 Mar 2021
2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

புனேவில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோ – பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

2:52 (IST) 26 Mar 2021
மநீம வேட்பாளர்களில் சிறை சென்றவர்கள், குற்றவாளிகள் கிடையாது – கமல்ஹாசன்

கோவை சிங்காநல்லூரில் மநீம வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த மநீம தலைவர் கமல்ஹாசன், மநீம வேட்பாளர்களில் சிறை சென்றவர்கள், குற்றவாளிகள் கிடையாது என்று தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் பரவி உள்ள நோய் கழகங்கள்தான் என்று சாடினார்.

12:48 (IST) 26 Mar 2021
திமுக வேட்பாளர் எ.வ.வேலு இடங்களில் ஐடி ரெய்டு நிறைவு

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் வீடுகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததுள்ளது. நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

11:06 (IST) 26 Mar 2021
பெண்களை இழிவுப்படுத்தி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது – கனிமொழி

அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுப்படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள திமுக எம்பி கனிமொழி, இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது என்றும், இதுதான் திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூகநீதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

11:02 (IST) 26 Mar 2021
புதுச்சேரிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

10:19 (IST) 26 Mar 2021
சென்னை துறைமுகத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து சரக்கு கப்பலில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

9:58 (IST) 26 Mar 2021
தமிழக தபால் வாக்குகள் விபரம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தபால் வாக்குள் குறித்து விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 1,38,497 தபால் வாக்குகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 11,646 தபால் வாக்குகளும், குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 562 தபால் வாக்குகளும் உள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9:23 (IST) 26 Mar 2021
புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் வாங்காளர்களின் தகவல்களை திருடி குறுச்செய்தி அனுப்பி பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

8:48 (IST) 26 Mar 2021
கன்னியாகுமரி துறைமுக திட்டத்தில் பாஜக நாடகம் – விஜய் வசந்த்

தமிழக சட்டசபை தேர்தலுடன் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த போட்டியிடும் நிலையில், அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தில், “கன்னியாகுமரி துறைமுக திட்டத்தில் பாஜக நாடகமாடுவதாக குற்றச்சாட்டியுள்ளார்.

8:43 (IST) 26 Mar 2021
“மதவாத‌த்தை ஒழிக்கும் தடுப்பூசி திமுக” – கி.வீரமணி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திராவி கழகத்தின் தலைவர் கி.வீரமணி, மதவாத‌த்தை ஒழிக்கும் தடுப்பூசி திமுக” என தெரிவித்துள்ளார்.

8:41 (IST) 26 Mar 2021
தேர்தல் பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு காவர்கள் பேருந்து மோதி உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் நிதியுதலி வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

8:08 (IST) 26 Mar 2021
அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். இதில் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

8:00 (IST) 26 Mar 2021
பிரதமர் மோடி டெல்லியிலிருந்து வங்கதேச பயணம்!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று டெல்லியிலிருந்து வங்கதேசம் புறப்பட்டு சென்றார். வங்கதேசத்துடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பன்முகப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வங்கதேசத்தின் தேசிய தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவுக்காக செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

6:58 (IST) 26 Mar 2021
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

6:55 (IST) 26 Mar 2021
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சி!

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சி பாஜக என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

5:57 (IST) 26 Mar 2021
12 தலைப்புகளில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜக

உங்களின் தேவையே எங்கள் வாக்குறுதி என்ற தலைப்பில் 50 ஆயிரம் பேரிடம் கருத்துகளை கேட்டு அறிக்கை தயாரித்ததாக கூறப்பட்டுள்ளது. புதுவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் மீனவர்களின் வருமானம் இரட்டிபாக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜக.

5:50 (IST) 26 Mar 2021
தங்கத்தின் விலை குறைப்பு

கிராமுக்கு ரூ. 14 குறைந்து ரூ. 4,216க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 112 குறைந்து ரூ. 33,728க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

5:46 (IST) 26 Mar 2021
9 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் 9 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

5:44 (IST) 26 Mar 2021
புதுவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

புதுவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

5:42 (IST) 26 Mar 2021
இலவசங்கள் எப்போதும் ஏழ்மையை போக்காது – கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அண்ணாநகர் தொகுதி வேட்பாளார் பொன்ராஜை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ம.நீ.ம. வேட்பாளர்கள் ரவுடிகள் போல் செயல்படமாட்டார்கள். இலவசங்கள் எப்போதும் ஏழ்மையை போக்காது என்று கூறியுள்ளார்.

5:09 (IST) 26 Mar 2021
ஒரே நாளில் 59,118 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 257 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

5:07 (IST) 26 Mar 2021
முகக்கவசம் அணியாதது தான் கொரோனா தொற்றுக்கு காரணம்

மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதால் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

4:01 (IST) 26 Mar 2021
கேரள சட்டப்பேரவை தேர்தலில் திருநங்கை போட்டி

கேரளாவில் நடைபெற இருக்கும் தேர்தலில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் வெங்க்ரா தொகுதியில் போட்டியிடுகிறார் திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ்.

3:56 (IST) 26 Mar 2021
ப்ரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைப்பு

காங்கிரஸ் பொதுச்செயலாளார் ப்ரியங்கா காந்தியின் தமிழக வருகை வருகின்ற ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3:36 (IST) 26 Mar 2021
தமிழகம் வருகிறார் ஜே.பி. நட்டா

16வது தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகை தருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

3:33 (IST) 26 Mar 2021
சென்னையில் துவங்கியது தபால் வாக்கு பெறும் பணி

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிடம் வீட்டிற்கே சென்று தபால் வாக்குகள் வாக்குகளை பெறும் பணி சென்னையில் துவங்கியுள்ளது. 15 தபால் ஓட்டுகளுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

3:14 (IST) 26 Mar 2021
சென்னை நகைக்கடையில் ஐ.டி. ரெய்டு – ரூ.1.50 கோடி பறிமுதல்

சென்னை சௌகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத ரூ. 1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3:12 (IST) 26 Mar 2021
வங்கதேசத்தின் 50வது சுதந்திர தினம்

வங்க தேசத்தின் 50வது சுதந்திரன் தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3:10 (IST) 26 Mar 2021
தஞ்சையில் மேலும் நால்வருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் பள்ளியில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 ஆசிரியர்கள், ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை பாதிக்கப்பட்ட 225 பேரில் 120 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Title: Tamil nadu assembly elections 2021 live updates admk dmk bjp congress

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com