Advertisment

Tamil News Highlights : தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் மூடல்; ஆன்லைனில் மட்டுமே வகுப்பு

5 மாநில தேர்தல் குறித்த அனைத்து அப்டேட்களும் உடனுக்குடன் உடன் உங்கள் கையில்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் மூடல்; ஆன்லைனில் மட்டுமே வகுப்பு

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகின்ற காரணத்தால் கல்லூரிகள் இன்று முதல் மூடப்படுகிறது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மேற்கொண்டு படிக்க துவங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 20ம் தேதியோடு வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நிறைவுற்றது. இன்று வேட்புமனுவை திரும்பப் பெற இறுதி நாள் ஆகும். நிராகரிப்பு, மறுபரிசீலனை, வாபஸ் போன்றவை முடிந்த பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 93.1, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.86.45

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அசாம் மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



  • 20:16 (IST) 22 Mar 2021
    தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.



  • 18:38 (IST) 22 Mar 2021
    இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் - பாஜக வாக்குறுதி

    18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் - தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி



  • 18:37 (IST) 22 Mar 2021
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் - பாஜக தேர்தல் வாக்குறுதி

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் - பாஜக தேர்தல் வாக்குறுதி

    8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும் - பாஜக வாக்குறுதி



  • 18:31 (IST) 22 Mar 2021
    ‘தொலைநோக்கு பத்திரம்’ பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

    தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.



  • 18:25 (IST) 22 Mar 2021
    விசிகவுக்கு 6 தொகுதிகளிலும் பானை சின்னம் - திருமாவளவன்

    திமுக கூட்டணியில் உள்ள விசிக தமிழகத்தில் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் ஆறு தொகுதிகளுக்கும் பானை சின்னம்!

    புதுவையில் போட்டியிடும்

    ஒரு தொகுதிக்கும்

    பானை சின்னம்!

    நாகரிக வளர்ச்சிக்கான சின்னம் பானை!

    உழைப்பின் வலிமைக்கான சின்னம் பானை!

    அறிவின் வெற்றிக்கான சின்னம் பானை!

    அறிவு+உழைப்பு+நாகரிகம்= விடுதலைச் சிறுத்தைகள்

    விசிக சின்னம் பானை!” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 17:53 (IST) 22 Mar 2021
    மார்ச் 30ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி மார்ச் 30ம் தேதி தமிழகம் வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.



  • 17:47 (IST) 22 Mar 2021
    1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு - ஐகோர்ட் உத்தரவு

    1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு டி.என்.பி.எஸ்.சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 17:15 (IST) 22 Mar 2021
    மல்ஹாசன் பேசுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை - உதயநிதி ஸ்டாலின்

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், கமல்ஹாசன் பேசுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 16:02 (IST) 22 Mar 2021
    தேசிய திரைப்பட விருதுகள்

    2019-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 16:01 (IST) 22 Mar 2021
    விவசாய கடன் வழங்கியதில் தமிழகம் முதலிடம்

    கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக விவசாய கடன் வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்று கூறியுள்ள நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ₨16,181.31 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது என மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 15:55 (IST) 22 Mar 2021
    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம்

    சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 14:42 (IST) 22 Mar 2021
    தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 13:35 (IST) 22 Mar 2021
    காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு

    காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.



  • 13:31 (IST) 22 Mar 2021
    ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம்

    இந்த தேர்தலில் வாக்களிக்க 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண் வாக்காளர்கள் 3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.



  • 13:15 (IST) 22 Mar 2021
    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பிரச்சாரம் செய்ய தடை

    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்றும் தொகுதி வாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.



  • 13:11 (IST) 22 Mar 2021
    தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா

    சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 13:08 (IST) 22 Mar 2021
    அரசாணையை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

    9 முதல் 11-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசாணை ரத்து செய்ய முடியாது என்றும் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்தி கொள்ளலாம் என்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 12:14 (IST) 22 Mar 2021
    கல்வி உரிமையை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது - உதயநிதி ஸ்டாலின்

    ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும். மிக முக்கியமான கல்வி உரிமையை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.



  • 11:03 (IST) 22 Mar 2021
    மார்ச் 23ம் தேதி அன்று வெளியாகிறது தலைவி ட்ரெய்லர்

    கங்கனா நடிப்பில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது. நாளை கங்கனா ரனாவத்தின் பிறந்த நாள்.



  • 11:03 (IST) 22 Mar 2021
    பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறது திமுக ; ஓ.பி.எஸ்

    தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 கிராம் தங்கம் தற்போது 8 கிராமாக அதிகரித்து வழங்கப்படுகிறது. மக்கள் நலனுக்காக ஜெயலலிதா பல திட்டங்களை மிகவும் ஆராய்ந்து செய்தார். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே திமுக அளித்து வருகிறது என்று துணை முதல்வர் அறிவிப்பு.



  • 10:04 (IST) 22 Mar 2021
    வானதி சீனிவாசனின் பண்பை பாராட்டுகிறேன்

    மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல் ஹாசனுக்கு ஏற்பட்ட காயம் குறித்து நலம் விசாரித்த வானதி சீனிவாசன், கமல் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து வானதியின் பண்பை பாராட்டுகிறேன் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.



  • 09:31 (IST) 22 Mar 2021
    மேலும் ஒரு மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா

    சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.



  • 09:23 (IST) 22 Mar 2021
    செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு

    மணல் அள்ளுவது தொடர்பாக சர்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 09:21 (IST) 22 Mar 2021
    உலக அளவில் 9.97 கோடி பேருக்கு கொரோனா

    உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.38 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 9.97 கோடி நபர்கள் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 27.27 லட்சமாக அதிகரித்துள்ளது.



  • 09:10 (IST) 22 Mar 2021
    முதல்வர் பிரச்சாரம்

    கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அப்பகுதிகளில் போட்டியிடும் அதிமுக - கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார் அவர்.



  • 08:57 (IST) 22 Mar 2021
    இத்தனை ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்? அதிமுக எம்.எல்.ஏவை விரட்டிய பொதுமக்கள்

    திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் போட்டியிடுகிறார் சந்திரசேகர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்கு இருக்கும் கிராமம் ஒன்றிற்கு சென்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்? எங்கள் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள் என்று பொதுமக்கள் அதிமுக எம்.எல்.ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



  • 08:44 (IST) 22 Mar 2021
    விருதாச்சலம் தொகுதியை மாவட்டம் ஆக்குவேன் - பிரேமலதா

    நல்லூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், விருதாச்சலத்தை தலைமையகமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த தொகுதியை தனி மாவட்டமாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார்.



  • 08:41 (IST) 22 Mar 2021
    தஞ்சையில் கொரோனா அதிகரிப்பு

    தஞ்சை மாவட்டத்தில் 168 மாணவர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் 2 பள்ளி மாணவர்கள், கும்பகோணத்தில் 10 மாணவர்கள் மற்றும் கும்பகோணம் அன்னை கல்லூரியில் 5 மாணவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி.



  • 08:39 (IST) 22 Mar 2021
    திருச்செந்தூர் மாவட்டத்தில் கனமழை

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி



Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment