/tamil-ie/media/media_files/uploads/2018/09/eps-...jpg)
Tamil Nadu news today live updates
Tamil Nadu Assembly Session : ''தமிழகத்திற்கு, மாதம்தோறும் விடுவிக்க வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு வழங்காதது குறித்து, ஏதாவது குரல் கொடுத்தீர்களா,'' என, காங்கிரசுக்கு, முதல்வர் பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா இருந்தபோது, 740 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது, 750 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில், 494 கோடி லிட்டர் குடிநீர் தான் வழங்கப்பட்டது. நிலத்தடி நீர் கீழே சென்றதால், மக்கள், மற்ற தேவைகளுக்கும்,குடிநீரை பயன்படுத்துகின்றனர். இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசை பொறுத்தவரை, ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர், தற்போதும் வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.
Tamil Nadu Assembly Session News: தமிழ்நாடு சட்டமன்றம் செய்தி
நாட்டின், எந்த மூலையில், மக்கள் பாதிக்கப்பட்டாலும், ஓடோடிச் சென்று, உதவி செய்யும் காக்கும் கரமும், கருணை உள்ளமும் படைத்தவர்கள், தமிழக மக்கள். லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடித்து விட்டனரே என்ற எரிச்சலில், தமிழக மக்களைப் பார்த்து, கோழைகள், சுயநலமிக்கவர்கள் என, கிரண்பேடி கூறியிருப்பது, ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி, ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாகவே தெரிகிறது. தமிழக மக்கள் மீது, கண்ணிய குறைவான விமர்சனம் செய்த, கிரண்பேடியை, ஜனாதிபதி, ஒரு நிமிடம் கூடத் தாமதம் செய்யாமல், திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.