Tamil Nadu Assembly Session begins today : இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் “இன்று சட்டப்பேரவை கூடும் என்றும், துவக்க உரையினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிகழ்த்துவார்” என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும் படிக்க : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனின் அறிக்கை.
உரை மற்றும் விவாதங்கள்
ஆளுநர் உரையில், இந்த ஆண்டு தமிழக அரசு, தமிழ்நாட்டிற்கு செய்ய இருக்கும் சிறப்புத் திட்டங்கள் குறித்த செய்திகள் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
ஆளுநர் உரை மீதான விவாதம், மானியம் தொடர்பான விவாதம் இந்த கூட்டத்தில் நடத்தப்ப்படும். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதையும் இந்த கூட்டத்தில் தான் அறிவிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. ஸ்டெர்லைட் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களில் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக வெளிநடப்பு :
தமிழக அரசு பல்வேறு விசயங்களில் தோல்வி அடைந்துள்ளது. கஜ புயல் சேதாரங்களுக்கு போதுமான நிதியை வழங்கவில்லை என்று கூறி அவையில் வெளிநடப்பு செய்துள்ளனர் திமுகவினர்.
இந்நிலையில், பொங்கல் பரிசாக திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ. 1000 வழங்கப்படும். ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இந்த அரசு தொகை வழங்கப்படும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.