Tamil Nadu Assembly Session : ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று துவங்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார். கவர்னர் உரை நிகழ்த்திய பின் சபை நிகழ்ச்சிகள் நிறைவடைய உள்ளன. அதன்பின் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கவர்னர் உரை மீது விவாதம் நடத்த எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஜன. 10ம்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றும்படி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதே நேரம் இந்த கூட்டத் தொடரை பயன்படுத்தி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டுகிறது.
Live Blog
Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
நாளை காலை 10 மணிக்கு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இதன் பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூடக்கூடிய ஒவ்வொரு நாட்களிலும் காலை 10 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதில் சட்டமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், புதன்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். அதனைத் தொடர்ந்து கடைசி நாளான வியாழக்கிழமை அன்று முதல்வர் பதிலுரை, சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்
ஜனவரி 10ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று துவங்கியது. கவர்னர் உரையை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக பேசிய சபாநாயகர் தனபால், வரும் 9ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழக மக்கள் எந்த மதம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுமண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும். கோதாவரி ஆற்றில் இருந்து குறைந்தது 200 டிஎம்சி நீரையாவது வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு, முதல்வர் பழனிசாமி, "நடந்தாய் வாழி காவிரி" என்ற திட்டத்தை துவக்கியுள்ளார் என்று கவர்னர் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே, இந்த உரையால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, குடியுரிமை விவகாரத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்கப்படவில்லை உள்ளிட்டவைகளை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி; கோவை மாவட்டம் பொள்ளாச்சி; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக்கி மூன்று புதிய மாவட்டங்கள் துவக்குவதற்கான அறிவிப்புகளையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; அ.தி.மு.க. பல இடங்களில் சரிவை சந்தித்துள்ளது. எனவே இதுகுறித்த அனல் பறக்கும் விவாதங்கள் சபையில் நடக்க வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights