சிறப்பு மருத்துவ க்ளினிக்… கோவில் பராமரிப்பு, புதிய சமத்துவபுரம்… சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Tamil Nadu AssemblyNews : தமிழகத்தில 3-வது நாளாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தி்ல் முதல்வர் ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Tamilnadu Assembly News Update : கடந்த 21-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டசபையில் முதலில் நாளில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு பின், கடந்த இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்று வந்தது. இந்த விவாதங்களில் முக்கியமாக நீட் தேர்வு விதி விலக்கு குறித்து கடுமையாக விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டசபையின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டத. இதில் திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரை வெறும் முன்னோட்டம் மட்டுமே தமிழகத்தில் ஐந்தாண்டு வளர்ச்சித்திட்டங்களை ஒரு உரையில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்படும் நோயாளிகளின் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், சிறப்பு மருத்துவர்களுடன் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்பு கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குணமடைந்த நோயாளிகளிடமிருந்து கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து புகார் வருவதைகும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் எம். கருணாநிதியால் முதலில்  செயல்படுத்தப்பட்ட சமத்துவபுரம் [சமத்துவ வாழ்விடங்கள்] திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பழைய சமத்துவபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சமத்துவபுரங்கள். பின்னர் பெரியார் நினைவு சமத்துவபுரம் என பெயரிடப்படும் என்றும் கூறியுள்ளார். கடந்த 1996 2001 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து சமூகத்தினரும் ஒரே வளாகத்திற்குள் வசிப்பதற்காக வீட்டு வசதிகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த நிதியாண்டில் மொத்தம் 100 கோடி செலவில் 100 கோயில்கள் அவற்றின் பாரம்பரிய மதிப்பு மாற்றாமல் புதுப்பிக்கப்படும் என்றும், கோயில்களில் உள்ள குளங்கள் மற்றும் தேர்தல் புதுப்பிக்கப்பட்டு, திருவிழாக்கள் நடத்தப்படும், என்றும் இந்த கோயில்களை புதுப்பிக்க  1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறிலும், விழுப்பும் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திலும் பெரிய தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும், இதனால் 10 முதல் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் மே 7 ஆம் தேதி திமுக கட்சி ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவரது அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பட்டியலிடப்பட்ட முதல்வர் ஸ்டாலின், பொது மக்களும் நல்ல மனிதர்களும் தங்களைப்பற்றி அறிந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலின் போது வாக்காளர்களை ஈர்ப்பதற்கான ம் காந்தங்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை, அந்த அறிவிப்புகள் அனைத்தும்  மக்களின் முன்னேற்றத்திற்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் தேவையான செயல்களாகும், அவை உறுதியாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu assembly tn cm stalin announced many scheme

Next Story
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொடர்ச்சி நான் – மு.க.ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com