Advertisment

Tamil nadu assembly today highlights : 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!

Tamil Nadu Assembly News Today: திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu assembly

Tamil nadu assembly

Tamil nadu assembly today : தமிழக சட்டப்பேரவை ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமான கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்குகிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Advertisment

Tamil Nadu news today live updates

நேற்றைய தினம், நீட் மசோதாக்கள் நிராகரிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்ததாகவும், தவறான தகவலை அளித்ததற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தகவல் வந்தது, நான் கூறியது தவறு என்றால் பதவி விலக தயார் என்றார்.அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Live Blog

tamil nadu assembly news today : இன்றைய சட்டசபை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உரையுடன் தொடங்கியது.














Highlights

    15:47 (IST)11 Jul 2019

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

    பட்டாசு பாதுகாவலர் முதல்வர் பழனிசாமி இருக்கும்வரை பட்டாசு தொழிலுக்கு எந்த ஆபத்தும் வராது  என  சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதால் பேரவையில் சிரிப்பலை   ஏற்பட்டது.  பட்டாசு உற்பத்தி மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் கூறிய ராஜேந்திர பாலாஜி இத்தகைய கருத்தை பதிவு செய்தார். 

    14:10 (IST)11 Jul 2019

    சட்டப்பேரவையில் சிரிப்பலை!

    உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழகத்தில் விரைவில் தொழில்தொடங்க வரும் அமைச்சர் சம்பத்  கூறினார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ‘வரும் ஆனா வராது’ என்று கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இதே போல் நேற்றும் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் வரும் ஆனா வராது என பதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    13:53 (IST)11 Jul 2019

    நாவலர் நெடுஞ்செழியனுக்கு விழா!

    நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு விழா எடுக்கப்படும்   பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.  திமுக பொருளாளர் துரைமுருகனின் வேண்டுகோளை ஏற்று துணை முதலமைச்சர் அறிவிப்பு.  

    13:01 (IST)11 Jul 2019

    அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!

    நுகர்பொருள் வாணிப கழகங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு, நாளை முதல் அமல்  வரும் என்று பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். 

    12:53 (IST)11 Jul 2019

    கோவையில் பேருந்து நிலையம் :

    கோவையில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் - என்றூ அவை விதி 110 கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.   61 ஏக்கரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ. 178 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதல்வர் தெளிவுப்படுத்தியுள்ளார். 

    12:44 (IST)11 Jul 2019

    முதல்வர் அறிவிப்பு!

    ரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும்  என்று பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும், எடப்பாடி தெரிவித்துள்ளார். 

    tamil nadu assembly highlights: நேற்று சட்டசபையில் நடந்த முக்கிய விவாதங்கள்!

    அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, இந்த கடிதம் 2017ம் ஆண்டு கிடைக்கப் பெற்று இதற்கு முன்பு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கூட கூறாமல், 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்து அரசு மக்களை ஏமாற்றி உள்ளது. இது மாணவர்களின் பிரச்சினை. அமைச்சர் ஏட்டிக்கு போட்டி பேசுவது சரியில்லை. இது பொறுப்பற்ற செயல் என்றார்.

    அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில் மசோதா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தால், அதனை சட்டசபையில் தெரிவித்திருப்போம். ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கும், நிராகரிக்கப்பட்டதற்கு வித்தியாசம் உள்ளது. எனவே எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. எனவே நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அம்மாவின் அரசு வழக்கை சந்தித்து வருகிறது என்றார்.

    அதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், சட்டத்துறை அமைச்சர் சொன்னது போல, 2017ம் ஆண்டு மத்திய அரசு மசோதா தொடர்பாக அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு உடனடியாக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

    Dmk Aiadmk Tamilnadu Assembly
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment