பொதுவாழ்வில் வெற்றி தோல்வி பொருட்டல்ல… பாஜகவுடன் கூட்டணி தொடரும் : இபிஎஸ் – ஒபிஎஸ் கூட்டறிக்கை

OPS Statement About BJP Alliance : தமிழக்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aiadmk Coordinator OPS Statement About BJP Alliance : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல சர்ச்சைகள் எழுந்தாலும் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த பெரிய கட்சி என்ற முறையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இதிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய அதிமுகவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கொங்கு மண்டலத்தை தவிர மற்ற பகுதிகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்த அதிமுக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் தேர்தலை சந்தித்த அதிமுக வீழ்த்தி அடைந்ததற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் என்றும், தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வீழ்ச்சிக்கு பாஜகதான் காரணம் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டோம் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசியிருந்தார்.

ஆனால் சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் அதிமுகவினால் தான் பாஜக தோற்றுவிட்டது. நீங்கள் சொல்வது போன்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு என்று கூறியிருந்தார். இதனைத் தொடருந்து இரு கட்சியின் நிர்வாகிகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி சண்முகம் கூறியது அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை. இது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேச நலன கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றும், இதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அதிமுக பாஜக நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள் கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஒபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் கருத்துக்கள் குறித்து எதும் செல்லப்படவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒ.பன்னீர் செல்வம் கருத்தை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்றும், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது பொதுவாழ்வில் பொருட்டல்ல மக்களின் நலனே முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu bjp aiadmk alliance confirmed ops release statement

Next Story
பாஜக கூட்டணியால் அதிமுக தோல்வி: சிவி சண்முகம் கிளப்பிய சர்ச்சைTamilnadu news in tamil: Former Minister CV Shanmugam talks about BJP and gets trolls
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com