CM stalin | Tn Bjp | பிப்ரவரி 28 ஆம் தேதி திமுக அரசின் செய்தித்தாள் விளம்பரத்தின் பின்னணியில் பிற நாடுகளின் ராக்கெட்டுகளுக்கு இடையே 'சீனக் கொடி' இருந்தது சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில், பாஜக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாண்டரின் (சீன) மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது, நடந்துகொண்டிருக்கும் விவாதங்களுக்கு மத்தியில் அவரை நுட்பமாக கேலி செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது.
விளம்பரத்தில் சீனக் கொடி சர்ச்சை
பிப்ரவரி 28 அன்று திமுக அமைச்சர் கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில் பல்வேறு நாடுகளின் ராக்கெட்டுகளுடன் 'சீனக் கொடி' காணப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
குல்சேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவதள நிலையததுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில, முன்னதாக வெளியான இந்த விளம்பரம் பரவலான விமர்சனங்களைக் கிளப்பியது.
மோடி மீது திமுக விளம்பரம்
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தமிழகம் வந்த இரண்டு நாள் பயணத்தின் போது, தி.மு.க.வின் விளம்பரத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
தேசப் பெருமையை அலட்சியப்படுத்தும் அதே வேளையில், நாட்டின் சாதனைகளை ஆளுங்கட்சி (திமுக) அலட்சியப்படுத்துகிறது” என்றார். இந்த நிலையில் பிரதமர் மோடி தோல்வி பயத்தில் பேசுவதாக திமுக அவரை விமர்சித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“