scorecardresearch

திமுக தலைவர்களின் ரூ. 2 லட்சம் கோடி சொத்து ஆவணங்கள் வெளியிடுவேன்: அண்ணாமலை பேச்சு

2 லட்சம் கோடி ரூபாய் தி.மு.க முதல்வர் தொடங்கி திமுகவின் எம்எல்ஏக்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியீடுவேன்.

திமுக தலைவர்களின் ரூ. 2 லட்சம் கோடி சொத்து ஆவணங்கள் வெளியிடுவேன்: அண்ணாமலை பேச்சு

தி.மு.க தமிழக பாஜக இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க. அமைச்சர்களின் 2 லட்சம் கோடி சொத்து ஆவணங்களை வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து எதிர்கட்சியாக அதிமுகவை விட பாஜக கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதில் குறிப்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள கடிகாரம் லட்ச கணக்கில் மதிப்புடையது என்றும், இந்த கடிகாரம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியானது. இந்த கடிகாரம் நான் பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பே வாங்கியது என்று அண்ணாமலை விளக்கம் அளித்திருந்த நிலையில், கடிகாரம் வாங்கிய ரசீதை இன்று வெளியிடுவாரா என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுகப்பி இருந்தார்.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,

பொதுவாக ஆட்சியில் இருப்பவர்வர்களை பார்த்து மக்கள் தான் கேள்வி கேட்பார்கள். ஆனால் இப்போது நடப்பது மிகவும் புதிதாக உள்ளது. இந்தி வரலாற்றில் 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு, 75 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க ஒரு சாமானிய மனிதனை பார்த்து நீங்கள் பில் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

அதற்காகத்தான் 75 ஆண்டுகாலஇந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப்போகிறேன். எனது வாட்ச்க்கு பில் மட்டுமல்ல நான் 2010-ல் போலீஸ் வேலையில் சேர்ந்ததில் இருந்து இன்று வரை 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த அனைத்தையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். போலீஸ் வேலையில் நான் இருக்கும்போது 80 லட்சத்தில் இருந்து ஒரு கோடி சம்பளம் வந்திருக்கலாம் மாதம் 85 ஆயிரம் சம்பளம் கொடுத்தாங்க.

சம்பளமாக வந்த ஒருகோடி ரூபாய் பணத்தை எப்படி செலவு செய்தேன் என்பதை காட்டுகிறேன். இந்த 13 வருடங்களில் நான் கட்டிய அனைத்து பில்களையும் காட்டுகிறேன். இந்த விவரங்களை நான் பாதயாத்திரை செல்லும் நாளில் வரும் பிரஸ்மீட்டில் வெளியிடுகிறேன்.

அதோடு மட்டும் இல்லாமல் இந்த பிரஸ்மீட்டில் தி.மு.க.வின் அமைச்சர்கள் பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிடபோகிறேன். முதல்வர் அவரின் குடும்பம், சொத்து எங்க வச்சிருக்காங்க என்பதை வெளியிடுகிறேன். நமக்கு தெரிந்தவரைக்கும் இவை அனைத்தும் 2 லட்சம் கோடியை தாண்டும். இந்த 2 லட்சம் கோடி ரூபாய் திமுக முதல்வர் தொடங்கி திமுகவின் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியீடுவேன்.

தேர்தல் ஆணையத்தில் முதல்வர் கொடுத்த சொத்து பட்டியலில் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர் வைத்திருக்கும் கார் பற்றி நாங்கள் சொல்கிறோம். உங்கள் மகன் வெளிநாட்டு காரை வரி கட்டாமல் இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது உங்கள் மீது உங்கள் மகன் மீதும் சிபிஐ கேஸ் போட்டார்கள் அதன் விபரங்களை ஏப்ரல் மாதம் வெளியிடுகிறேன்.

திமுக எம்எல்ஏ ஒருவர் இந்தோனேசியாவில் போர்ட் வைத்துள்ளார். இரண்டு தலைமுறையை வளர்க்கக்கூடிய காசு 2 லட்சம் கோடி. அமைச்சர்கள் பெயரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி அதனுடன் சேர்ந்த நிலம், தனியார் மருத்துவக்கல்லூரி இதை கேட்டால் தலை சுத்திவிடும் என்று தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu bjp head annamalai speech about dmk ministers scam