Advertisment

நீட் தேர்வு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தமிழக அரசு தயங்குவது ஏன்? அண்ணாமலை கேள்வி

விக்கிரவாண்டி தேர்தலில் 3 அல்லது 4-வது இடத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான், அ.தி.மு.க போட்டியிடவில்லை – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
annamalai trichy

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப்போது

நீட் தேர்வு குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தமிழக அரசு தயங்குவது ஏன் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Advertisment

திருச்சியில் நடந்த பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறலையும் மீறி பா.ம.க வெற்றிபெறும். இந்த தேர்தலில் 3 அல்லது 4-வது இடத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான், அ.தி.மு.க போட்டியிடவில்லை. தி.மு.க என்ற ‘ஏ’ டீம் வெற்றிபெற, அ.தி.மு.க என்ற ‘பி’ டீம் போட்டியிடவில்லை.

நீட் தேர்வு குறித்து அரசியல் கட்சித் தலைவராக விஜய் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து, எங்கள் கட்சி வளர்ச்சிக்குப் பயன்படும். பா.ஜ.க.,வை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நீட்டை எதிர்க்கிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க அரசு, நீட் தேர்வுக்கு முன், நீட் தேர்வுக்கு பின் எவ்வளவு பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்ற வெள்ளை அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்?

மாநில அரசின் கல்விக் கொள்கையில் அரசியலுக்காக சில விஷயங்களை கூறிவிட்டு, மத்திய அரசின் கல்விக் கொள்கையை அப்படியே காப்பி அடித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தால், அதைக் குலக்கல்வித் திட்டம் என்கின்றனர். ஆனால், மாநில கல்விக் கொள்கையில், மீனவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு படகு மற்றும் கடல் சார்ந்த விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை குலக்கல்வி என்று ஒப்புக் கொள்வார்களா?

அதேபோல, உருது பள்ளிகள் அதிகம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உருது திணிப்பு இல்லையா?

அ.தி.மு.க அழிவுக்கு ஜெயக்குமார் தான் முதல் காரணம். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமியும், ஜெயக்குமாரும் பேசப் பேச எங்களுக்கு வாக்குகள் அதிகரிக்கின்றன.

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் என் மீது அவதூறு பரப்பிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி வரும் 9-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

கோவை, நெல்லை மேயர்களை மட்டும் நீக்கினால் போதாது, எல்லா மேயர்களையும் நீக்க வேண்டும். அப்போதுதான் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment