/indian-express-tamil/media/media_files/2025/02/20/OS23EJeEw8B8jot9EFAg.jpg)
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன்
மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என வி.சி.க தலைவர் திருமாவளவனைக் குறிப்பிட்டு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தி.மு.க.,வினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் உயர்நிலைப் பள்ளி (Blue Star Secondary School) என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திருமாவளவன் தான்.
அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?
திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
— K.Annamalai (@annamalai_k) February 20, 2025
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற… https://t.co/X8EGTAuSjIpic.twitter.com/6EuqlnvPG1
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.