Advertisment

நொய்யல் திருவிழாவில் காவடி ஆட்டம் ஆடிய அண்ணாமலை; வைரல் வீடியோ

கோவை நொய்யல் திருவிழா; காவடி ஆட்டம் ஆடிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை; வைரல் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai Kavadi

கோவை நொய்யல் திருவிழா; காவடி ஆட்டம் ஆடிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

கோவை பேரூர் ஆதீன மடத்தில்,பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Advertisment
publive-image

இதையும் படியுங்கள்: பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இல்லை: ஓ.பி.எஸ் அணி அதிரடி அறிவிப்பு

நொய்யல் ஆற்றை காப்பதை மையமாக கொண்டு நடைபெறும் இந்நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

publive-image

அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றுகிறார். முன்னதாக இந்நிகழ்விற்கு வருகை தந்த அண்ணாமலை, அங்கு நடைபெறும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார். மேலும், காவடி ஆட்ட கலைகுழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamil Nadu Bjp Coimbatore Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment