/indian-express-tamil/media/media_files/2025/01/30/HDuRbHtehUzi7hwtc3Gf.jpeg)
பிரதமர் மோடி ஒரு போதும் தமிழ் நாட்டுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரமாட்டார் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணமலை அ.வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கூறியுள்ளார்.
அரிட்டாப்பட்டி மக்கள் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் முன்னெடுத்தனர். அதன்பின்னர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாப்பட்டி மக்கள் டெல்லி சென்று மத்திய கனிமவள அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதை தொடந்து மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட்டது என அறிவிப்பு வெளிவந்தது.
இதை அடுத்து பாராட்டு விழாவிற்கு கிராம மக்கள் இன்று ஏற்பாடு செய்து இருந்தனர். விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அ.வல்லாளப்பட்டி கிராமத்திற்கு வருகை தந்தனர். கிராம மக்கள் சார்பில் பூ தூவி மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடந்து ஊர் மக்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை "தமிழ் பாரம்பரிய சான்றான இப்பகுதி காக்கப்படும். 477 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு போராட்டம் நடந்தது. இங்குள்ள அம்பலக்காரர்கள் ஆடர் போட்டு கொடுத்தால் மட்டுமே நாங்கள் ஊருக்கு செல்வோம் என கூறினார்கள். உங்கள் குரலுக்கு செவி சாய்த்து மோடி இத்திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மக்களின் போராட்டம் நியாயமானது என்பதாலே ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.க எப்போதும் பாராட்டு விழாவிற்கு செல்லாது. ஆனால் ஊர் அம்பலக்காரர்கள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்துள்ளார்.
நான் இந்த இடத்தில் அரசியல் பேசவில்லை. தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் திட்டம் ரத்து செய்யப்பட வில்லை. இம்மண்ணின் மைந்தர்கள் மீது மோடி அன்பு கொண்டுள்ளமையால் ரத்து செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வணக்கம் என தமிழில் தொடங்கிய அமைச்சர் கிஷன் ரெட்டி, “ஏழை எளியவர்கான அரசு மோடி அரசு. நாட்டின் பாரம்பரியத்தை மட்டுமல்ல. தமிழ் கலாச்சார த்தையும் காப்பாதும் மோடி அரசு தான்.
தமிழக மக்களை பார்த்து வணங்குகிறேன். மோடி மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளனர். உலகம் முழுவதும் தமிழின் சிறப்பை மோடி பரப்பி வருகிறார். தமிழர்களின் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் மோடி. இது வரலாற்றில் ஒரு மகத்தான ஒன்று.
உத்திரமேரூர் தமிழ் கல்வெட்டு தான் உலகத்திற்கு முன்னோடி என்று சொன்னவர் மோடி. நமது ஜல்லிக்கட்டில் சிறப்பு கவனம் செலுத்தி மீண்டும் ஜல்லிக்கட்டு கொண்டுவந்தவர் மோடி.
தமிழ் பண்பாட்டை காக்கும் பொருட்டு காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவற்றை நடத்திகாட்டியவர் மோடி. குஜராத்துக்கும் தமிழக்கத்திற்கும் ஒன்றுமையான விழாவை நடத்தியுள்ளோம். மதுரையும் காசியும் பிரசித்தி பெற்றவை என்பதால் காசி தமிழ் சங்கம் நடத்தி தமிழனின் பெருமையை காத்தவர் மோடி.
தமிழக மீனவர்கள் சிக்கலில் சிக்கும் போதெல்லாம் மக்களை காத்தவர் பாரத பிரதமர். தமிழ் பற்று, பாரம்பரிய பற்று மேலுள்ள காதால் தான் தமிழர்களுக்கு நன்மை செய்கிறார் மோடி. கடவுளும் அம்பலக்காரகளும் மீண்டும் என்னை வரசொன்னால் மீண்டும் நான் இந்த மண்ணிற்கு வருவேன். எனக்கு இந்த வந்தது மிகவும் மகிழ்ச்சி.” இவ்வாறு கிஷன் ரெட்டி உரையாற்றினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.