நாடாளுமன்ற தொகுதிகள் குறையுமா? யார் சொன்னது என்பதை ஸ்டாலின் கூற வேண்டும் – அண்ணாமலை

மும்மொழி கொள்கை விவகாரத்தில் தோல்வி ஏற்பட்டதை மறைக்கவே தொகுதி மறுவரையறையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்; முதல்வர் ஏன் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்; ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம்

author-image
WebDesk
New Update
annamalai stalin kovai

தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முதலமைச்சர் முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவை பாதிக்கும் என யார் முதல்வருக்கு சொன்னது? தொகுதிகள் மறுவரையறை பற்றி முதல்வருக்கு யார் சொன்னார்கள் என தெரியாது. அந்த மனிதன் யார் என கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். முதலில் மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும்.

முதல்வர் ஃபிட் ஆக இருக்கிறாரா என சந்தேகம் எழுகிறது. வருடம் ஒருமுறை மெடிக்கல் செக்அப் செய்வார்கள், அது வழக்கம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் புரளி பரப்பவதாக பிரதமர் கூறியுள்ளார். முதல்வர் ஏன் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். மும்மொழி கொள்கை எதிர்ப்பில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். தி.மு.க.,வின் தொண்டர்கள் பள்ளி சென்று கொஞ்சமாவது படியுங்கள். 

2001ல் மறுசீரமைப்பு செய்திருக்க வேண்டும் என முதல்வரிடம் யார் சொன்னார்கள் என்று அவர் சொன்னால் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்கும். மறுசீரமைப்பு வரும் போது தமிழகத்தில் பிரச்சினை வராமல் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பு. காங்கிரஸ் மாடல் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டது. காங்கிரஸ் போன்று முடிவெடுக்க மாட்டோம் என பிரதமர் கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல் முதல்வர் நடந்து கொள்கிறார். மும்மொழி போருக்கு தயாராகட்டுமே. திமுகவின் மொழி போராட்டம் என்னவென்றால் அவர்கள் குழந்தைகளுக்கு மூன்று மொழி, மற்றவர்களுக்கு இரண்டு மொழி என்பது தான். மூன்று மொழி படித்த சாதனையாளர்கள் முதல்வர் கண்ணுக்கு தெரியவில்லையா?. இரு மொழியால் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்றால் முதல்வரின் கணக்கு வாத்தியார் யார் என பார்க்க வேண்டும்.

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும். மொழி என்பது ஒரு ஆற்றல் அது சாதனைக்கு துணை புரியும். மூன்றாவது மொழியால் அப்துல் கலாம் ஐயா வேண்டாம், ஜனாதிபதி ஆக மாட்டேன் என கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும். புதிய கல்வி கொள்கையை நிரூபர்கள் நீங்கள் படிக்க வேண்டும். உங்களுக்கு தமிழாக்கம் செய்து தருகிறேன். உங்களுக்கு தவறாக புரிதல் ஏற்பட்டிருக்கலாம்

ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை இல்லை. ஓநாயும் ஆடும் சண்டை போட்டு கொள்வது போன்று உள்ளது. அரசு ஊழியர்கள் பக்கம் தான் நாங்கள் இருப்போம், ஜாக்டோ ஜியோ பக்கம் இல்லை. ஜாக்டோ ஜியோ இதற்கு முன்பு தி.மு.க.,விற்கு ஆதரவாக இருந்தவர்கள். தேர்தலின்போது தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இன்று ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் கபட நாடகமாக இருக்கலாம்.

கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்திதாளில் பெட்டி செய்தியாக வர வேண்டும் என்பதற்கு தான். கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் காமெடிக்காக நடத்தப்படுவது, அதனால் கொடி விற்பனை செய்பவர்களுக்கு கொடி விற்பனையாகிறது. மும்மொழி கொள்கை மூலம் நம்முடைய குழந்தைகள் திராவிட மொழி (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) ஏதேனும் ஒன்றை கற்று கொள்ளவேண்டும், நான்காவது மொழியாக வட மொழி ஒன்றை (இந்தி, சமஸ்கிருதம்) கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Stalin Annamalai kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: