அ.தி.மு.க.,வை உடைக்கும் அவசியம் பா.ஜ.க.,வுக்கு இல்லை – நயினார் நாகேந்திரன்

டி.டி.வி தினகரனுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசத் தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் இல்லை – மதுரையில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

டி.டி.வி தினகரனுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசத் தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் இல்லை – மதுரையில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

author-image
WebDesk
New Update
nainar nagendran (2)

அ.தி.மு.க வலிமையாகவே உள்ளது, கூட்டணி கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.,வுக்கு இல்லை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர். அ.தி.மு.க வலிமையாக உள்ளது. கூட்டணியை சிதைக்க பா.ஜ.க.,வுக்கு எந்தத் தேவையும் இல்லை. தி.மு.க.,வினர் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகின்றனர். யாரிடமும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது.  டி.டி.வி தினகரனுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசத் தயாராக இருக்கிறேன். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக கூறியுள்ளார். இந்த சந்திப்பு குறித்த முழு விவரம் எனக்கு தெரியாது. செங்கோட்டையன் அமித் ஷாவைச் சந்தித்தது கூட்டணியில் இடர்பாடாகாது. அமித்ஷா – செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை.

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க ஐ.சி.யூ.,வுக்கு செல்கிறதா அல்லது தி.மு.க கூட்டணி ஐ.சி.யூ.,வுக்கு செல்கிறதா என்பது தெரியும். தி.மு.க.,வினர் ஆட்சி விழா எடுப்பதற்காக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த வீண் விளம்பரம் செய்யும் தி.மு.க ஆட்சியை தான் நாங்கள் வேண்டாம் என்று நினைக்கிறோம். இது கண்டிக்கத்தக்க செயலாகும். 

Advertisment
Advertisements

தி.மு.க 40 சதவீத வாக்கு வங்கியுடன் வலிமையுடன் உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறியதை அண்ணாமலை தெரிவித்து இருப்பார். அதை சிலர் தவறாக திரித்து கூறுகின்றனர். இந்த விவகாரத்தை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்வதை பற்றி நான் கூற வேண்டியதில்லை. ஏனென்றால், சனி என்றால் அனைவருக்கும் தெரிந்தது. 

நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப்போகிறேன் என்ற தகவல் உண்மையல்ல. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி என்னிடம் நன்றாக பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா என் இல்லத்திற்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றார். எனவே, பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் எதுவுமில்லை. பா.ஜ.க கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதுவே முக்கியம். இதனால், அ.தி.மு.க கூட்டணியில் பிளவு என்பது கிடையாது.” இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 

Bjp Nainar Nagendran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: