Advertisment

'யானையை அடக்க வந்த சிங்கமே..!' போஸ்டர்களால் மிரள வைத்த பாஜக

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்ற அன்று சென்னையில் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களும் அதில் இடம்பெற்ற வாசகங்களும் திராவிடக் கட்சிகளையும் ஏற்கெனவே இங்கே இருக்கிற மாநில கட்சிகளுக்கும் கடும் போட்டி கொடுத்து மிரள வைப்பதாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
'யானையை அடக்க வந்த சிங்கமே..!' போஸ்டர்களால் மிரள வைத்த பாஜக

அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகளில் போஸ்டர்களுக்கு ஒரு பெரிய முக்கிய பங்கு இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் போஸ்டரில் வாசகங்களை படிப்பவர்களை ஈர்க்கும்படி அமைப்பதில் மாநில அரசியல் களை தேசியக் கட்சிகள் மிஞ்ச முடியாது என்ற அளவிலேயே இருந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டு முக்கிய் அதிராவிட கட்சிகளான திமுக, அதிமுக சார்பில் தொண்டர்கள் தலைவர்களுக்கு அடைமொழியுடன் வீதிகளில் ஒட்டுகிற போஸ்டர்களைப் பார்க்கிற எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத அளவுக்கு என்றைக்கும் நினைவில் இருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

Advertisment

திமுக போஸ்டர்களில் அக்கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி இருந்த காலத்தில், முத்தமிழறிஞரே, வாழும் வள்ளுவரே, உலகத் தமிழர்களின் தலைவரே என்று பல புகழ் மொழிகள் இடம்பெற்றிருந்தன. இன்றும்கூட திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை இப்படியான வாசகங்கள் அடைமொழிகள், புகழ் வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்கள் ஒட்டுவதில் திமுக தொண்டர்கள் முன்னணியில் இருப்பார்கள்.

அதே போல, அதிமுகவில், எம்.ஜி.ஆர். காலத்தில் பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர் என்று தொடங்கி ஜெயலலிதா காலத்தில் புரட்சி தலைவி, தங்கத் தாரகை, இரும்பு பெண்மணி, அம்மா என்று புகழ்மொழிகளுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.

பாஜக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு நிகரான ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து திவீரமாக முயற்சி செய்து வருகிறார்கள். பாஜகவை வலுப்படுத்துவதற்கு பாஜக தலைவர்கள் திராவிட கட்சிகளின் வழிகளையே பின்பற்றி வருகிறார்கள். அதன் பிரச்சார உத்தி, சோசியல் என்ஜினியரிங் என பல வழிகளிலும் திராவிட கட்சிகளின் உத்தியையே பின்பற்றுகிறார்கள். மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை பாஜகவில் இணைப்பது போன்றவையும் அந்த வகையில் அமைந்த ஒன்றுதான். ஆனாலும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 22 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும், தமிழகத்தில் ஒருநாள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பாஜகவில் பல சீனியர்கள் இருந்தாலும் இளைஞரான அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது குறித்து பல விவாதங்கள் எழுந்தன. ஆனாலும், பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட அண்ணாமலை பொறுப்பேற்கும் விழாவை பாஜகவினர் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டனர்.

பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்க, அண்ணாமாலை, கோவையில் இருந்து ஜூலை 14ம் தேதி காலை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக ஒவ்வொரு நகரின் எல்லையிலும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கூடி பூக்களை துாவி கட் அவுட் வைத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்படி தொடங்கிய அண்ணாமலையின் பயணம் ஜூலை 16ம் தேதி சென்னையில் கமலாலயத்தில் தலைவர் பதவியேற்பு விழாவுடன் நிறைவடைந்தது.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் தி.நகரில் அமைந்துள்ளது. அண்ணாமலை பொறுப்பேற்க வந்த அன்று சென்னையில் பாஜக தொண்டர்கள் அளித்த பிரம்மாண்ட வரவேற்பு என்பது திராவிடக் கட்சிகளின் விழாக்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதைப் பார்த்த திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவுமே திகைத்துப்போனதாக பாஜகவினர் பெருமை பேசுகிறார்கள்.

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்ற அன்று சென்னையில் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களும் அதில் இடம்பெற்ற வாசகங்களும் திராவிடக் கட்சிகளையும் ஏற்கெனவே இங்கே இருக்கிற மாநில கட்சிகளுக்கும் கடும் போட்டி கொடுத்து மிரள வைப்பதாக அமைந்துள்ளது என்கிறார்கள் பாஜக வட்டாரங்கள்.

அதில் இடம்பெற்ற வாசகங்கள் சில இங்கே தருகிறோம்: இளைய தலைமுறைகளின் எழுச்சி நாயகர், எங்கள் அன்பு சகோதரர் அண்ணாமலை, மதம் கொண்ட அரசியல் யானை அடக்க வந்த சினம் கொண்ட தமிழக சிங்கமே என்று இடம் பெற்றிருந்த வாசகங்கள் பார்ப்பவர்களை ஈர்க்கும்படி இருந்தன. இந்த ஸ்டைல் அப்படியே திராவிடக் கட்சிகளின் பாணியாக இருந்தது. இப்படி பாஜக திராவிடக் கட்சிகளையும் மாநில கட்சிகளையும் போஸ்டரால் மிரளவைத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Bjp Dmk Admk Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment