தேர்தலில் தோற்றால் திமுக தலைமையில் மாற்றம் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையை ராமநாதபுரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: ‘ராகுல் மீண்டும் எம்.பி ஆவார்… சுப்ரீம் கோர்ட்டை விட பெரிய கொம்பன் யாரும் இல்லை’ – டி.ஆர். பாலு
இதனை விமர்சித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், " பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை " எனக் கூறினார். இதற்கு அண்ணாமலை, மு.க ஸ்டாலின் என் மகன், என் பேரன் என யாத்திரை மேற்கொள்வார் என தெரிவித்தார்.
தொடர்ந்து மீண்டும் விமர்சித்த மு க ஸ்டாலின், இது பாரதிய ஜனதாவிற்கு வாழ்வா சாவா போராட்டம் என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி பேசிய அண்ணாமலை, " இந்த தேர்தலில் திமுக தோற்கும் பட்சத்தில், கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்" என தெரிவித்துள்ளார். அதாவது திமுகவின் தலைவராக கனிமொழி வருவார் எனப் பொருள் படும் படி அண்ணாமலை பேசியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“