scorecardresearch

மீண்டும் லைம்லைட்டில் கே.டி ராகவன்: வீட்டுக்கு சென்று சந்தித்த அண்ணாமலை

பாரதிய ஜனதாவின் முன்னாள் நிர்வாகி கே.டி ராகவனை சந்தித்துப் பேசினார் மாநில தலைவர் கு. அண்ணாமலை.

Tamil Nadu BJP president Annamalai met KT Raghavan at his residence
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கே டி ராகவனை சந்தித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் கே. டி. ராகவன். இவர் பங்கு பெறும் தொலைக்காட்சி விவாதங்களில் இவருக்கு என்று தனி மரியாதை உண்டு.
எதையும் நேரடியாக பேசக் கூடியவர். வழக்குரைஞர் என்பதால் பல நேரங்களில் கிடுக்கிப்பிடி கேள்விகள் மற்றும் பதில்கள் அளிப்பவர்.

இந்த நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதையடுத்து, அவர் பா.ஜ.க கட்சியில் இருந்து விலகினார். தற்போது எந்தக் கட்சியிலும் இல்லை.
அவரை இன்று பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கே.டி ராகவன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் குணமடைய முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கே.டி. ராகவன் வீட்டுக்கே சென்று அண்ணாமலை சந்தித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கே.டி. ராகவன் பா.ஜ.கவில் இருந்து விலகிய போது, “என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு[email protected]_k அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்.
நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். மம் வெல்லும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu bjp president annamalai met kt raghavan at his residence

Best of Express